பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மே 2024-க்கான 'செயலக சீர்திருத்தங்கள்' அறிக்கையின் 14-வது பதிப்பு வெளியிடப்பட்டது
Posted On:
24 JUN 2024 6:35PM by PIB Chennai
மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் உள்ள நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, 2024, மே மாதத்துக்கான செயலக சீர்திருத்தங்கள்" குறித்த மாதாந்திர அறிக்கையின் 14-வது பதிப்பை, (i) முடிவெடுப்பதில் செயல்திறனை அதிகரித்தல் (ii) தூய்மை இயக்கம் (iii) நிலுவையில் உள்ள நாட்களை குறைந்தபட்ச அளவுக்குக் குறைத்தல் ஆகிய 3 முன்முயற்சிகளின் கீழ் விரிவான பகுப்பாய்வுடன் வெளியிட்டுள்ளது. முடிவெடுப்பதில் திறனை அதிகரிப்பதற்கான முன்முயற்சியின் கீழ், தூய்மையை நிறுவனமயமாக்குதல், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் அடுக்குகளைக் குறைத்தல் ஆகியவற்றுக்கான அரசின் முயற்சிகளை இந்த அறிக்கை எடுத்துரைக்கிறது.
இந்தப் பதிப்பில், (i) ஸ்கிராப் அகற்றல் பிரிவில் சிறந்த நடைமுறைகள் (ii) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மீது கவனம் ஆகிய 2 புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
2024 மே மாதத்திற்கான அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
1. முடிவெடுப்பதில் செயல்திறனை அதிகரித்தல்- மின்-அலுவலக செயல்படுத்தல் மற்றும் பகுப்பாய்வு
ஒரு மத்திய செயலகத்தில் செயலில் உள்ள கோப்புகளுக்கான சராசரி பரிவர்த்தனை அளவுகள் 2021-ல் 7.19 ஆக இருந்த நிலையில் 2024, மே மாதத்தில் 4.08 ஆக கணிசமாகக் குறைந்துள்ளது.
2024 மே மாதத்தில் மொத்த கோப்புகளில் 94.34% மின்-கோப்புகளாகும். மொத்த ரசீதுகளில் 94.21% மின்-ரசீதுகளாகும்.
13 அமைச்சகங்கள்/துறைகள் மே மாதத்தில் மின்-ரசீதுகளில் 100% பங்கைக் கொண்டுள்ளன.
2. தூய்மை இயக்கம் மற்றும் நிலுவை குறைப்பு
3,919 இடங்களில் தூய்மை முகாம் நடத்தப்பட்டது
. 2.03 லட்சம் சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டது
கழிவுப்பொருட்கள் விற்பனை மூலம் ரூ.52.53 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
பொதுமக்களின் 4,95,164 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
3. சிறந்த நடைமுறைகள்: கழிவுப்பொருட்கள் அகற்றல்
பல அமைச்சகங்கள் / துறைகளில், கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை விடுவிக்கவும், அவற்றை சுத்தமான மற்றும் புதிய அலுவலக இடங்களாக மாற்றவும் இலக்கு நிர்ணயித்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சகங்கள் / துறைகளின் இத்தகைய முயற்சிகளின் புகைப்படங்கள் மாதாந்திர அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.
******
MM/PKV/RS/DL
(Release ID: 2028365)
Visitor Counter : 64