சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), சென்னை கிளை அலுவலகத்தின் “வரைவு (Draft) இந்திய தரநிலை- வீட்டு உபயோகத்திற்காக துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்கள் (IS 14756 இன் மூன்றாவது திருத்தம்)” பற்றிய மானக் மந்தன் – கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

Posted On: 24 JUN 2024 2:46PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

இது சம்பந்தமாக, இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகம், “வரைவு (Draft) இந்திய தரநிலை- வீட்டு உபயோகத்திற்காக துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்கள் (IS 14756 இன் மூன்றாவது திருத்தம்)” பற்றிய மானக் மந்தன் – கலந்துரையாடல் நிகழ்ச்சியை ராஜ் பார்க் ஹோட்டல், ஆழ்வார்பேட்டை, சென்னையில் இன்று ஏற்பாடு செய்தது.

ஸ்ரீ பி ஜே கௌதம், விஞ்ஞானி-டி, BIS சிறப்பு விருந்தினர்கள், பிரமுகர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை வரவேற்றார். அவர் தனது வரவேற்பு உரையில் துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்கள் [Stainless steel utensils] அவற்றின் ஆயுள், அழகியல் காரணமாக சமையலறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவை அரிப்பு மற்றும் கறை படிவதை எதிர்க்கின்றன, நீண்ட கால செயல்திறனை உறுதி செய்கின்றன. அதே நேரத்தில் அவற்றின் நுண்துளை இல்லாத மேற்பரப்பு பாக்டீரியா வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம் சுகாதாரத்தை பராமரிக்கின்றது. அதிக வெப்பநிலையைத் தாங்கும் திறனுடன், அவை பல்வேறு சமையல் முறைகளுக்கு ஏற்றதாகவும், சுத்தம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் எளிதானதாகவும் உள்ளன. அவை எந்த சமையலறை அலங்காரத்தையும் சிரமமின்றி பூர்த்தி செய்கின்றன. கூடுதலாக, அவற்றின் மறுசுழற்சி பண்பு ,  சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும்  , துருப்பிடிக்காத பண்பு  நவீன வீடுகளுக்கு ஒரு நிலையான தேர்வாக அமைகிறது, என்று கூறினார்

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் திரு அருண் புச்சகயாலா, விஞ்ஞானி-டி, இந்த நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கும் போது,  உணவு மற்றும் பானங்களுக்கான சமையல் பாத்திரங்கள் மற்றும் கேன்கள் (தரக் கட்டுப்பாடு) ஆணை 2024 மூலம் மத்திய அரசு, துருப்பிடிக்காத எஃகு சமையல் பாத்திர உற்பத்தியாளர்கள் BIS சான்றிதழுக்கான உரிமத்தை செப்டம்பர் 1, 2024 அன்று அல்லது அதற்கு முன் பெறுவதன் மூலம் இந்திய தரநிலை 14756:2022 இன் தேவைகளுக்கு இணங்குவதை கட்டாயமாக்கியுள்ளது.  ஒட்டுமொத்தமாக, வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்களின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை தரநிலை வழங்குகிறது என்றும் கூறினார். இந்த கலந்துரையாடல் அமர்வின் மூலம், வரைவு ஆவணம் குறித்த பங்குதாரர்களின் கருத்துக்களை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது IS 14756 தரநிலையை திருத்தும் நோக்கத்திற்கு உதவுகிறது, இதன் விளைவாக வரும் தரநிலை தற்போதைய தொழில் சூழ்நிலை மற்றும் நுகர்வோரின் ஆசைகளுக்கு பொருத்தமானதாக இருக்கும்.

ஸ்ரீ விஜயராஜு கே, துணை இயக்குநர்- தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில், சென்னை, நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசும் பொழுது, BIS ஒவ்வொரு மாதமும் தொழில்துறையின் நலனுக்காக "மானக் மந்தன்" என்ற தலைப்பில் புதிய தொடர் கலந்துரையாடல்  நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளது, தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகள், வர்த்தக சபைகள், தொழில் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அத்தகைய தயாரிப்புகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அரசுத் துறைகள், ஒழுங்குமுறை அமைப்புகள், ஆய்வகங்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு  புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முக்கியமான திருத்தங்கள்  மற்றும் பரவலான புழக்க வரைவுகளைப் பகிரவும் திட்டமிடப்பட்டுள்ளதைப்  பாராட்டினார்

ஸ்ரீ பி ஜே கௌதம், விஞ்ஞானி-டி, BIS தனது தொழில்நுட்ப விளக்கக்காட்சியின் போது, பங்கேற்பாளர்களுக்கு BIS இன் செயல்பாடுகள் மற்றும் e-BIS & BIS கேர் செயலி  உட்பட BIS இன் சமீபத்திய முயற்சிகள் பற்றி விளக்கினார். மேலும் இந்திய தர நிர்ணய அமைவனம் , பாத்திரங்கள், கட்லரி மற்றும் உள்நாட்டு ஹார்டுவேர் பிரிவுக் குழு மூலம், "வீட்டு உபயோகத்திற்காக துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்கள்" பற்றிய வரைவு இந்திய தரநிலை (IS 14756 இன் மூன்றாவது திருத்தம்) மூலம் IS 14756 ஐ திருத்தும் செயல்முறையில் உள்ளது. துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்களுக்கான தரநிலை, 2000 இல் நிறுவப்பட்டது, பின்னர் 2017 மற்றும் 2022 இல் திருத்தப்பட்டது, பாத்திரங்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரிவான விவரக்குறிப்புகளை அமைக்கிறது. இந்த தரநிலை, பல முந்தைய தரநிலைகளை மேம்படுத்தி , சமையல், பரிமாறுதல்,  திறன், பரிமாணங்கள் மற்றும் பொருள் கலவை தொடர்பான குறிப்பிட்ட அளவுகோல்களுடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

திரு அருண் புச்சகயாலா, விஞ்ஞானி-டி, BIS தனது தொழில்நுட்ப விளக்கக்காட்சியின் போது,  சமீபத்திய திருத்தத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் யாதெனில் தரநிலையின் நோக்கம் ,   வீட்டு உபயோகத்திற்காக வடிவமைக்கப்பட்ட பாத்திரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இது தரநிலையின் பயன்பாட்டில் தெளிவு மற்றும் துல்லியத்தை உறுதி செய்கிறது. கூடுதலாக, அழுத்தம் மற்றும் நூற்பு செயல்முறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன, மேலும் தரநிலையின் கீழ் உள்ள பல்வேறு பாத்திர வகைகளுக்கான அளவுகோல்கள் மற்றும் வரையறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், குறைந்தபட்ச தடிமன் மற்றும் குறிக்கும் தேவைகளை சரிசெய்தல் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

முன்னதாக, திரு. R. ரோஹித் ராம், மாணவர் & BIS ஸ்டாண்டர்ட் கிளப் உறுப்பினர், இயந்திரவியல் துறை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்கள் பற்றிய தனது புரிதலை விளக்கினார்.

நிகழ்ச்சியில் சுமார் 80 பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

   

 

   

***

SRI/KV



(Release ID: 2028237) Visitor Counter : 27


Read this release in: English