ஆயுஷ்

பாரம்பரிய மருத்துவத்தில் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தை உலக சுகாதார அமைப்புடன் இணைந்து ஆயுர்வேத ஆராய்ச்சிக் கெளன்சில் நடத்தவுள்ளது

Posted On: 22 JUN 2024 3:31PM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கெளன்சில்,  2024 ஜூன் 24 அன்று புதுதில்லியில் "பாரம்பரிய மருத்துவத்தில் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை" குறித்த ஒரு நாள் தேசிய ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய உள்ளது. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகம் மற்றும் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் ஆகியவற்றுடன் இணைந்து  இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொள்கை வகுப்பாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், நோயாளிகள் மற்றும் தொழில்துறையினர்  உட்பட இந்தியாவில் உள்ள பாரம்பரிய மருத்துவத்துறையின் பல்வேறு  பிரதிநிதிகளை இந்த ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைக்கும்.

ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி போன்ற பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகளில் முக்கிய ஆராய்ச்சிப் பகுதிகளை அடையாளம் கண்டு முன்னுரிமை அளிப்பதே இதன் நோக்கமாகும்.

இந்தக் கூட்டத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் ஆலோசகர்கள் மற்றும் இணைச் செயலாளர்கள், நித்தி ஆயோகின் பிரதிநிதிகள், அனைத்து ஐந்து ஆயுஷ் ஆராய்ச்சி கெளன்சில்களின் தலைமை இயக்குநர்கள்,  ஆயுஷ் மற்றும் ஆயுர்வேத பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நிறுவனங்களின் இயக்குநர்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய மருத்துவ பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கின்றனர்.

மருத்துவ தாவர ஆராய்ச்சி, தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆய்வுகள், மருத்துவ சரிபார்ப்புகள், பாரம்பரிய மருந்துகளின் ஆய்வு ரீதியான பயன்பாடு, மருத்துவ சோதனை கண்காணிப்பு, பழங்கால மருத்துவ நூல்களின் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

 

***

SMB/PLM/DL



(Release ID: 2027958) Visitor Counter : 32


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP