பாதுகாப்பு அமைச்சகம்
பரிதாபாத் விமானப் படை தளத்தில் யோகா தின கொண்டாட்டம்
Posted On:
21 JUN 2024 4:52PM by PIB Chennai
10-வது சர்வதேச யோகா தினம் பரிதாபாத் விமானப்படை தளத்தில் இன்று (21.6.2024) கொண்டாடப்பட்டது. விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இதில் பங்கேற்று, யோகா பயிற்சி மேற்கொண்டனர். யோகா பயிற்றுனர்களாக பயிற்சி பெற்ற விமானப்படையினர் அவர்களது அனுபவத்தின் மூலம் பிரமாண்ட யோகா நிகழ்ச்சியை நடத்தியதுடன், பொதுவான யோகா பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.
லெப்பினெனட் கர்னல் சுரப் சேத்தி, யோகா பயிற்றுனரான ஜூனியர் வாரண்ட் அதிகாரி சஞ்ஜீத் குமார் உள்ளிட்டோர், யோகா பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் சுகாதார பலன்கள் குறித்து அறிமுக உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியின் போது, பல்வேறு யோகா, தியானப் பயிற்சிகள், சங்கல்ப, பிரார்த்தனை மற்றும் செயல்விளக்கங்களும் அளிக்கப்பட்டது. நிலையப் பணியாளர்கள் முழுமனதுடன் பங்கேற்றது இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக்கியது.
***
MM/RS/DL
(Release ID: 2027745)
Visitor Counter : 41