கலாசாரத்துறை அமைச்சகம்

தேசிய நாடகப் பள்ளி “ரங் அம்லான்” என்ற விளக்கத்துடன் கூடிய 10 நாள் சிறார் நாடகப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 21 JUN 2024 5:54PM by PIB Chennai

தேசிய நாடகப் பள்ளிரங் அம்லான்என்ற விளக்கத்துடன் கூடிய 10 நாள் சிறார் நாடகப் பயிலரங்கை, 2024, ஜூன் 22 முதல் ஜூலை 2 வரை காந்தி ஸ்மிர்தி மற்றும் தர்ஷன் சமிதியில் நடத்த செய்துள்ளது. 

நாடகச்  செயல்பாட்டின் மூலம் சிறார்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது இந்தப் பயிலரங்கு என்று காணொலிக் காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய நாடகப் பள்ளி இயக்குநர் திரு சித்தரஞ்சன் திரிபாதி தெரிவித்தார். மேலும் சிறார்களை அண்டை அயலாருடனும் சமூகத்துடனும் அர்த்தமுள்ள வகையில் இது ஒருங்கிணைக்கும் என்றும் அவர் கூறினார். 250 விண்ணப்பதாரர்களிடமிருந்து கலந்துரையாடல் அடிப்படையில், 150 சிறார்கள் இதற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

பயிலரங்கின் நிறைவில் 6 நாடகங்கள்  நிகழ்த்தப்பட உள்ளதாக அவர் கூறினார். பங்கேற்பாளர்கள் அனைவரும் அனைத்து நாடகங்களையும் காண்பது கட்டாயம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதே போல் கோடைகால நாடக விழா ‘லே’ பகுதியில் 2024, ஜூன் 26 முதல் 30 வரை நடைபெறவுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2027642

***

SMB/KPG/DL



(Release ID: 2027718) Visitor Counter : 32


Read this release in: English , Urdu , Hindi