சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
வருமான வரித்துறை அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம்
प्रविष्टि तिथि:
21 JUN 2024 6:15PM by PIB Chennai
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
வருமான வரித்துறை தலைமை ஆணையர்-1, சென்னை மற்றும் வருமான வரித்துறை இயக்குநர் ஜெனரல் (புலனாய்வு) திரு. கிருஷ்ண முராரி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
யோகா ஆசிரியர் டாக்டர் விக்ரம் சீனிவாசன் யோகாசனங்களை பற்றி செயல் விளக்கம் கொடுத்தார். நல்வாழ்வின் உடல், உளவியல் மற்றும் உணர்ச்சி அம்சங்களை மேம்படுத்த நமது அன்றாட வாழ்வில் யோகா பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இதில் சென்னை வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர். இதே போன்ற நிகழ்வுகள் தாம்பரம், கடலூர், புதுச்சேரி, கோவை, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களில் நடத்தப்பட்டது.


***
PKV/AG/RR
(रिलीज़ आईडी: 2027653)
आगंतुक पटल : 61
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English