சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
உலகின் பிரச்சனைகளுக்கு இந்திய வாழ்க்கை முறையில் தீர்வு காணலாம் என திரு பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
21 JUN 2024 12:36PM by PIB Chennai
சர்வதேச யோகா தினம் 2024-ஐ முன்னிட்டு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், டேராடூனில் உள்ள தேசிய வனத்துறை அகாடமி மைதானத்தில், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், “நமக்கும் சமுதாயத்திற்குமான யோகா” என்ற உணர்வுடன் நாம் அனைவரும் யோகா தினத்தை கொண்டாடி வருவதாக கூறினார். உலகின் பிரச்சனைகளுக்கு இந்திய வாழ்க்கை முறையில் தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, நமது இயற்கைச் சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவது என்ற மத்திய அரசின் உறுதிப்பாடான தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற திட்டத்தின் கீழ், டேராடூன் வனத்துறை வளாகத்தில் மரக்கன்று ஒன்றை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் நட்டு வைத்தார். இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பன்னோக்கு அரங்கையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2027324
***
SRI/MM/RS/RR
(रिलीज़ आईडी: 2027480)
आगंतुक पटल : 98