அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
எரிசக்தி சேமிப்பு மற்றும் மின்சார உற்பத்திக்கான புதிய வகை பொருட்கள் குறித்த அரிய தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்
Posted On:
20 JUN 2024 3:35PM by PIB Chennai
மத்திய அரசின் அறிவியல் – தொழில்நுட்பத் துறையின் கீழ், பெங்களூருவில் இயங்கி வரும் ஜவஹர்லால் நேரு நவீன அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் உமேஷ் வாக்மேர், அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம், தனிம அட்டவணையில் தொகுதி 4-ல் இடம்பெற்றுள்ள சால்கோ ஜினைடுகளின் ஒற்றை 2டி அடுக்கிற்குள் மெட்டாவேலண்ட் பிணைப்பை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக கண்டறிந்துள்ளார். இத்தகையை சால்கோஜினைடுகள் எரிசக்தி சேமிப்பு மற்றும் மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்துவமான பண்புகளைக் கொண்ட புதிய பொருட்கள், மின்சார தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உதவும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் புதிரான தன்மை கொண்ட இத்தகையை சால்கோஜினைடுகள், தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு உகந்தவை என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. வெப்ப நிலை, அழுத்தம் அல்லது மின்சாரம் சார்ந்த துறைகளில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ளவும் சால்கோஜினைடுகள் பயன்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2027008
***
AD/MM/RS/DL
(Release ID: 2027156)