தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"கும்னான் தின்" திரைப்படம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது: இயக்குநர் ஏக்தா மிட்டல்

प्रविष्टि तिथि: 17 JUN 2024 6:42PM by PIB Chennai

ஏக்தா மிட்டல் இயக்கிய கும்னான் தின் (காணாமல் போன நாட்கள்) ஒரு தைப்படமாகும். பணிக்காக  தொலைதூர நகரங்களுக்கு இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் கசப்பான அனுபவங்களை இது ஆராய்கிறது. மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும்  இந்தத் திரைப்படம் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ஏக்தா மிட்டல் பங்கேற்று பேசினார்.

து திரைப்படத்தின் உருவாக்கம் குறித்து விவரித்த ஏக்தா மிட்டல், இந்தப் படம் 2009-ம் ஆண்டில்  தொடங்கப்பட்டது என்று கூறினார். "'பிஹைண்ட் த டின் ஷீட்ஸ்' என்ற தலைப்பில் புலம்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களைப் பற்றி மூன்று குறும்படங்களை எடுத்ததாகவும் அதன் பின்னரும் அந்தத் தொழிலாளர்கள் பிரச்னைகள் குறித்து ஏதோ விடுபட்டதாக தாம் உணர்ந்ததாகவும் கூறினார். அதன் விளைவாகவே இந்தத் திரைப்படத்தை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இந்தத் திரைப்படத் தயாரிப்பின் போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களின் அனுபவங்களை தாம் கேட்டறிந்ததாகவும் அவர் கூறினார்.

"கும்னான் தின்" திரைப்படம் இந்தி, பஞ்சாபி மற்றும் சத்தீஸ்கரி மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இது 28 நிமிடங்கள் ஓடும் வகையிலான காலஅளவில் எடுக்கப்பட்ட படமாகும்.

-----
 

SRI/PLM/KPG/KV


(रिलीज़ आईडी: 2026239) आगंतुक पटल : 111
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Kannada , Marathi