அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியா 2 ஆண்டுகளில் 40 க்கும் மேற்பட்ட குவாண்டம் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கியுள்ளது, அவற்றில் சில உலகளாவிய திறனைக் கொண்டுள்ளன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
15 JUN 2024 6:29PM by PIB Chennai
"இந்தியா 2 ஆண்டுகளில் 40 க்கும் மேற்பட்ட குவாண்டம் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கியுள்ளது, அவற்றில் சில உலகளாவிய திறனைக் கொண்டுள்ளன" என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணை அமைச்சரும் (தனிப்பொறுப்புகள்), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை மற்றும் விண்வெளித் துறை மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், புதுதில்லியில் கூறினார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மறுஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், முதன்மை தேசிய குவாண்டம் மிஷனில் கவனம் செலுத்தவும், குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் குவாண்டம் தகவல்தொடர்பு மேம்பாட்டில் பணியாற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். குவாண்டம் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை இந்தியா தற்போது மற்ற நாடுகளுடன் சமமான நிலையில் உள்ளது என்று அவர் கூறினார். குவாண்டம் தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரை இந்தியாவை உலகளாவிய தலைமையாக நிறுவுவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"கடந்த 10 ஆண்டுகளில் வெளிப்புற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (ஆர் & டி) பெண்களின் பங்களிப்பு இரட்டிப்பாகியுள்ளது" என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஆஸ்பயர் திட்டத்தின் கீழ் சுமார் 300 பெண் விஞ்ஞானிகள் அரசிடமிருந்து 3 ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி மானியம் பெறுவார்கள் என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2025564
***
AD/RB/DL
(Release ID: 2025687)
Visitor Counter : 74