பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக செயல்படும் பல்வேறு நிறுவனங்களுக்கு நேரில் சென்று மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி ஆலோசனை மேற்கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 JUN 2024 10:26PM by PIB Chennai

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர் ஆகியோர் தில்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக செயல்படும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆலோசனை நடத்தினர்.

நிர்மல் சாயா வளாகத்திற்கு சென்ற அவர்கள், அங்கு மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் மகளிர் மேம்பாடு தொடர்பான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.  மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு அனில் மாலிக்கும் அமைச்சர்களுடன் சென்றார்.

சிறுமியருக்கான குழந்தைகள் இல்லம், பெண்களுக்கான பாதுகாப்பு இல்லம் உள்ளிட்டவற்றை அமைச்சர்கள் பார்வையிட்டர். இந்த நிறுவனங்கள் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வாத்சல்யா இயக்கத்தின் கீழ் நடத்தப்படுகின்றன. இந்த மையங்களில் உள்ள குழந்தைகளுடன் மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி கலந்துரையாடினார்.

இந்த நிறுவனங்களின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் குறித்து அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் விவாதித்தார்.

****

SMB/PLM/AG/KV

 


(வெளியீட்டு அடையாள எண்: 2025277) வருகையாளர் எண்ணிக்கை : 162
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी