உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
உணவுப் பதன தொழில்கள் துறை அமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்
Posted On:
13 JUN 2024 5:42PM by PIB Chennai
உணவுப் பதன தொழில்கள் துறை அமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு இன்று புதுதில்லியில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த அமைச்சகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் குறித்தும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சரிடம் துறையின் செயலாளர் திருமதி அனிதா பிரவீன் விவரித்தார்.
புதுதில்லி, பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் 2024 செப்டம்பர் 19 முதல் 22 வரை நடைபெற உள்ள உலக உணவு இந்தியா 2024 நிகழ்வுக்கான தயாரிப்புப் பணிகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
அரசின் 100 நாள் திட்டத்தை சாதிப்பதற்கு அதிகாரிகள் பாடுபட வேண்டும் என்று அமைச்சர் திரு சிங் அறிவுறுத்தினார். மைக்ரோ உணவு பதன தொழில்கள் மற்றும் விவசாயிகள் வருவாயை அதிகரிக்க பணியாற்றுமாறும் அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
***
AD/SMB/RS/DL
(Release ID: 2025145)
Visitor Counter : 75