நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சராக திரு ஜி கிஷன் ரெட்டி பொறுப்பேற்றார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 JUN 2024 5:42PM by PIB Chennai

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சராக திரு ஜி கிஷன் ரெட்டி இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றார். இந்தத் துறையின் முன்னாள் அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி, திரு கிஷன் ரெட்டியிடம் பொறுப்பை ஒப்படைத்தார். மத்திய சுரங்கம் மற்றும் கனிமங்கள் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே உடனிருந்தார்.

சுரங்கங்கள் அமைச்சக செயலாளர் திரு வி எல்  காந்தராவ், நிலக்கரி அமைச்சக செயலாளர் திரு அம்ரித் லால் மீனா மற்றும் மூத்த அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அமைச்சராக பொறுப்பேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய திரு கிஷன் ரெட்டி, நிலக்கரி மற்றும் சுரங்கத்துறையில் தற்சார்பு இந்தியாவை நோக்கி நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகங்கள் தீர்மானகரமாகவும், அர்ப்பணிப்புடனும், வெளிப்படைத் தன்மையுடனும் பணியாற்றும் என்றார்.

***


AD/SMB/RS/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2025124) வருகையாளர் எண்ணிக்கை : 153
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Telugu , Kannada , Malayalam