பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024 உலக சுற்றுச்சூழல் தினம்: பசுமைத் தடம் பதித்த இந்திய கடற்படை

Posted On: 05 JUN 2024 7:48PM by PIB Chennai

சுற்றுச்சூழல் மீதுள்ள பொறுப்புடைமையின் அடையாளமாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய முன்னுதாரண மாற்றத்தை விரைவுபடுத்தவும் , நிலையான வாழ்க்கை நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அதன் சுற்றுச்சூழல் தடத்தைக் குறைக்கவும் இந்திய கடற்படை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சி நெகிழ்வு போன்ற உலகளாவிய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான தீர்வுகளில் 2024 உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான கருப்பொருள்  கவனம் செலுத்துகிறது. கடல்சார் களத்தில் இந்த கருப்பொருளை விரிவுபடுத்த, மரம் நடுதல், சதுப்புநில பாதுகாப்பு கார்பன் தடம் குறைப்பு, நெகிழிகளை அகற்றல் மற்றும் கடலோரப் பகுதிகளிலிருந்து அவற்றை மீட்டெடுப்பது, சதுப்புநில வளர்ப்பு, கடற்பாசி வளர்ப்பு, பவளப்பாறை ஆய்வுகள் ஆகியவற்றில் அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான அரசு நியமன மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள நிறுவனங்களுடன் புதிய முயற்சிகள் அனைத்தும் எளிதாக்கப்பட்டுள்ளன.

கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு புத்துயிர் அளிப்பது மற்றும் ஆபத்தான பூர்வீக கடல் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சிகளுக்காக ஹெச்.சி.எல் அறக்கட்டளை மற்றும் தி ஹபிடேட்ஸ் டிரஸ்ட் ஆகியவற்றுடன் மார்ச் 23 இல் இந்திய கடற்படை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.  கார்வாரில் பல்லுயிர் கணக்கெடுப்பை  மேற்கொள்வது, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பல்லுயிர் பெருக்க பூங்கா மற்றும் பாதைகளை அமைத்தல், விசாகப்பட்டினம் மற்றும் கொச்சியில் பல்வேறு இடங்களில் ஆல்பா மெர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மிதக்கும் குப்பைத் தடுப்பை நிறுவுவதற்கான முன்மொழிவு போன்றவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்.      

பசுமையான வாழ்க்கைமுறைகளை பின்பற்றுவதன் அடிப்படை முக்கியத்துவத்துடன், இந்திய அரசின் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (லைஃப்) முன்முயற்சிக்கு ஏற்ப நிறுவன மற்றும் தனிப்பட்ட மட்டத்தில் தூய்மையான மற்றும் பசுமையான நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு இந்திய கடற்படை முன்னுரிமை அளித்துள்ளது. தானியங்கி கட்டுப்படுத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் எரிசக்தி சேமிப்பு, சூரிய திட்டங்கள் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரித்தல், மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் வாகன மாசுபாட்டைக் குறைத்தல், கடற்படை அமைப்புகளுக்குள் வாகனம் இல்லாத நாளை அனுசரித்தல், நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கார்பன் தடம் குறைப்பு மற்றும் புதிய கட்டுமான கட்டிடங்களுக்கான க்ரிஹா III விதிமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவை குறிப்பிடத்தக்க  நடவடிக்கைகளில் அடங்கும்.

'தூய்மை இந்தியா பிரச்சாரத்தைக்’ கருத்தில் கொண்டு, புனீத் சாகர் திட்டத்தின் கீழ் நாடு தழுவிய பிரச்சாரத்தை இந்திய கடற்படை தொடங்கியுள்ளது. நெகிழி மற்றும் பிற கழிவுகளை அகற்றி கடலோரங்கள் / கடற்கரைகளை சுத்தம் செய்வதிலும், அவற்றை சுத்தமாகவும், அமைதியாகவும், அழகாகவும் வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதிலும் இந்த பிரச்சாரம் கவனம் செலுத்துகிறது. உள்ளூர் கடற்படை பிரிவுகள் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாளை, ஆறுகள் / ஏரிகள் உள்ளிட்ட கடலோர தூய்மைக்காக அர்ப்பணிக்கின்றன.

***

(Release ID: 2022934)

PKV/BR/RR


(Release ID: 2023064) Visitor Counter : 94


Read this release in: English , Urdu , Hindi