அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலிய நிறுவனத்தில் 3-வது இந்திய பகுப்பாய்வு மாநாடு (ஐஏசி) தொடங்கப்பட்டது

Posted On: 05 JUN 2024 8:39PM by PIB Chennai

3-வது இந்திய பகுப்பாய்வு மாநாடு இன்று டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலிய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (சிஎஸ்ஐஆர்-ஐஐபி) தொடங்கியது. இது மூன்று நாள் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதை சிஎஸ்ஐஆர்-ஐஐபி மற்றும் இந்திய பகுப்பாய்வு விஞ்ஞானிகள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. "பசுமை மாற்றங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு" என்பது மாநாட்டின் கருப்பொருளாகும்.

தொடக்க அமர்வில் லடாக் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.கே.மேத்தா உரையாற்றுகையில், லடாக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட கல்வி உள்கட்டமைப்பின் பங்கு குறித்த கண்ணோட்டத்தை வழங்கினார். லடாக் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மேம்பட்ட ஆராய்ச்சி வசதிகளை அறிவியல் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் இதர நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ஆராய்ச்சி நிதிகள் மூலம் அவர் காட்சிப்படுத்தினார்.

சிஎஸ்ஐஆர்-ஐஐபி இயக்குநர் டாக்டர் ஹரிந்தர் சிங் பிஷ்ட், புதிய மேம்பட்ட பகுப்பாய்வு வசதிகளின் முக்கியத்துவம் மற்றும் எரிசக்தி மாற்றத்தில் அவற்றின் பங்கு குறித்து விளக்கினார். எஸ்.எஸ்.பி விருது பெற்ற   சென்னை ஐஐடி பேராசிரியர் திரு ரஜ்னிஷ் குமார், "CO2 பிடிப்பு மற்றும் வரிசைப்படுத்தல், கார்பன் பிடிப்பு பயன்பாடு மற்றும் வரிசைப்படுத்தல் மற்றும் இந்தியாவில் நிகர பூஜ்ஜிய இலக்குகளுக்கு அதன் பொருத்தம்" என்ற தலைப்பில் முழுமையான உரையை வழங்கினார்.

3 நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச மாநாடு, தொழிற்சாலைகள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பகுப்பாய்வு அறிவியலில் நடைமுறையில் உள்ள மற்றும் வரவிருக்கும் தீர்வுகளை முன்வைக்க ஒரு தளத்தை வழங்கும். இந்த மாநாட்டில் புகழ்பெற்ற பேச்சாளர்களின் உரைகள், ஆராய்ச்சியாளர்களின் விளக்கக்காட்சிகள் மற்றும் சிறப்பு மற்றும் முழுமையான அமர்வுகள் அடங்கிய ஐந்து தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெறும்.                                                 

***

(Release ID: 2022955)

PKV/AG/RR


(Release ID: 2023049) Visitor Counter : 67


Read this release in: Urdu , English , Hindi