தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஜெனீவாவில் நடைபெற்ற தகவல் சமூகம் குறித்த உலக உச்சிமாநாடு மன்றத்தின் உயர்மட்ட நிகழ்வில் ஐ.நாவின் "சாம்பியன்" விருதை டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் வென்றது
प्रविष्टि तिथि:
05 JUN 2024 8:35PM by PIB Chennai
இந்திய அரசின் முதன்மை தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்), ஏ.ஐ, சி-7, இ-சுற்றுச்சூழலின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட "செல் ஒலிபரப்பு அவசர எச்சரிக்கை மூலம் செல்பேசியினால் இயக்கப்பட்ட பேரழிவு நெகிழ்வு" திட்டத்திற்காக ஐ.நாவின் டபிள்யு.எஸ்.ஐ.எஸ் 2024 "சாம்பியன்" விருதை வென்றது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் மே 27முதல் 31 வரை சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தகவல் சமூகம் குறித்த உலக உச்சிமாநாடு மன்றத்தின் (டபிள்யு.எஸ்.ஐ.எஸ்) உயர்மட்ட நிகழ்வு 2024, சிறந்த பங்களிப்பிற்காக சி-டாட்-இன் செல் ஒலிபரப்பு அவசர எச்சரிக்கை தளத்தின் திட்டத்தை அங்கீகரித்தது.
சி-டாட்-இன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ராஜ்குமார் உபாத்யாய், ‘நன்மைக்கு செயற்கை நுண்ணறிவு’ என்ற நிகழ்வில் "மீட்பு செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு: சைபர் மோசடியைக் கண்டறிதல், தடுத்தல் மற்றும் பதிவு செய்வதில் புரட்சியை ஏற்படுத்துதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத செல்பேசி இணைப்புகளைக் கண்டறிய சி-டாட் உள்நாட்டில் உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தீர்வை அவர் எடுத்துரைத்தார். போலியான செல்பேசி இணைப்புகளைக் கொள்முதல் செய்வதையும் இது கண்டறிந்துள்ளது. தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக அங்கீகரிக்கப்படாத இணைப்பு பட்டியலை பல முகமைகளுடன் பகிர இந்தத் தளம் அனுமதிக்கிறது.
***
(Release ID: 2022951)
PKV/BR/RR
(रिलीज़ आईडी: 2023046)
आगंतुक पटल : 132