வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

புத்தொழில் நிறுவனங்களுக்கான உற்பத்தி இன்குபேட்டர்களை டி.பி.ஐ.ஐ.டி ஊக்குவிக்கிறது

Posted On: 31 MAY 2024 7:31PM by PIB Chennai

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (டி.பி.ஐ.ஐ.டி), புத்தொழில் சூழலியல் மற்றும் தொழில்துறையை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது, புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலமும், அவற்றுடன் ஒத்துழைப்பதன் மூலமும் உற்பத்தி இன்குபேட்டர்களை உருவாக்குவதன் மூலமும் உற்பத்தியில் புதுமைகளை வளர்ப்பதாகும். 

விரைவான தொழில்மயமாக்கல் மற்றும் உற்பத்தி ஆகியவை நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயந்திரங்களாகும். உற்பத்தியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் வலுவான உற்பத்தி விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவது ஆகியவை ஒரு நாடு எந்த அளவிற்கு ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாகவும், உலகளவில் விருப்பமான வர்த்தக பங்காளியாகவும் மாற முடியும் என்பதை தீர்மானிக்கின்றன. எந்தவொரு நாட்டிற்கும் வலுவான உற்பத்தித் தளத்தை உருவாக்குவது ஒரு அத்தியாவசிய நடவடிக்கையாகும். ஏனெனில் இது புத்தாக்கம் மற்றும் போட்டித்தன்மையை ஊக்குவிக்கிறது, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை அதிகரிக்கிறது, மேலும் தன்னம்பிக்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துகிறது.
சமீப ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகள் இந்தியாவின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்தியுள்ளன, மேலும் இந்தியா அதன் உற்பத்தி இலாகாவில் குறிப்பிடத்தக்க பல்வகைப்படுத்தலைக் கண்டுள்ளது. உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நீண்டகால முயற்சிகள் மூலம், புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் திறமையான தொழிலாளர்கள் தலைமையிலான உற்பத்திக்கான ஒரு மாறும் மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

உற்பத்தியை விரிவுபடுத்துவதுடன், கூடுதலாக, உற்பத்தி கண்டுபிடிப்புகளிலும் கவனம் செலுத்த வேண்டும். சமீப காலங்களில் புதிய கண்டுபிடிப்புகளின் வளர்ச்சி உற்பத்தி தொழில்நுட்பத்தில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றங்கள் மற்றும் அறிவியல் முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது. உள்நாட்டில் உருவாக்குதல் மற்றும் புதுமைப்படுத்துதல் மூலம் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளை இந்தியாவுக்கு மாற்றுவதில் நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர். இந்த வளர்ச்சியுடன் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தில் ஏற்பட்டுள்ள உயர்வு, உலகளாவிய நிலை மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தியுள்ளது. இதுபோன்ற உற்பத்திசார் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமையான முயற்சிகள் நாட்டிற்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. 

டி.பி.ஐ.ஐ.டியின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் 'ஸ்டார்ட்அப் மகாகும்பமேளா' திருவிழாவின் போது, வர்த்தகங்களுக்கு இடையிலான உற்பத்தியில் தொழில் காப்பகங்கள்  மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டன, இது உற்பத்தி தொழில் காப்பகங்களின் முக்கியத்துவம் மற்றும் நிறுவனமயமாக்கல் குறித்த விவாதங்களைக் கண்டது. டி.பி.ஐ.ஐ.டி, சமீபத்தில் 'ஓ.என்.டி.சி-ஸ்டார்ட்அப் மகோத்சவத்தை' ஏற்பாடு செய்தது. இது வளர்ந்து வரும் வணிகங்கள் மற்றும் யூனிகார்ன் நிறுவனங்களின் பங்கேற்பைக் கண்டது.

***

ANU/ PKV/BR/KV



(Release ID: 2022434) Visitor Counter : 34


Read this release in: English , Urdu , Hindi