எரிசக்தி அமைச்சகம்
பவர் ஃபைனான்ஸ் நிறுவனம், புவி நிலைத் தன்மை உச்சிமாநாடு மற்றும் விருதுகள் 2024 நிகழ்ச்சியில் சிஎஸ்ஆர் சாம்பியன் விருதைப் பெற்றது
प्रविष्टि तिथि:
29 MAY 2024 4:00PM by PIB Chennai
பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (PFC) நிறுவனம் கோவாவில் நடைபெற்ற புவி நிலைத்தன்மை உச்சிமாநாடு மற்றும் விருதுகள் 2024 நிகழ்ச்சியில் புதைபடிவ எரிபொருள் அல்லாத வணிகப் பிரிவில் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) விருதைப் பெற்றது. பொது நிறுவனங்கள் துறை, கோவா ஐஐடி மற்றும் அவுட்லுக் ஊடக நிறுவன அதிகாரிகள் முன்னிலையில், மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளர் திரு வி ஸ்ரீனிவாசிடமிருந்து பவர் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திருமதி பர்மிந்தர் சோப்ரா விருதைப் பெற்றுக்கொண்டார்.
அவுட்லுக் புவி நிலைத்தன்மை உச்சி மாநாடு மற்றும் விருதுகள் 2024 நிகழ்ச்சியில் அரசின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளை ஒருங்கிணைத்து நிலைத்தன்மையில் முன்மாதிரியான முயற்சிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனம் மற்றும் பொறுப்புள்ள கார்ப்பரேட் நிறுவனமாக பவர் ஃபைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், நிலைத்தன்மை, திறன் மேம்பாடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் ஆகிய துறைகளில் பல்வேறு நிலையான மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு சிஎஸ்ஆர் எனப்படும் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியிலிருந்து இந்நிறுவனம் ஆதரவு வழங்கி வருகிறது.
**
(Release ID: 2022061)
ANU/AD/PLM/KPG/RR
(रिलीज़ आईडी: 2022082)
आगंतुक पटल : 131