சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஜெனீவாவில் நடைபெறும் உலக சுகாதாரப் பேரவைக் கூட்டத்தின் இடையே, இங்கிலாந்து நாடாளுமன்ற சார்பு செயலாளர் மார்க்கம் பிரபுவுடன் மத்திய சுகாதார செயலாளர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்
प्रविष्टि तिथि:
28 MAY 2024 10:22PM by PIB Chennai
ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் 77-வது உலக சுகாதாரப் பேரவைக் கூட்டத்தின் இடையே, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு. அபூர்வ சந்திரா, இங்கிலாந்து நாடாளுமன்ற வெளியுறவு அமைச்சர் மார்க்கம் பிரபுவுடன் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான சில முக்கிய பிரச்சினைகள் குறித்து, குறிப்பாக சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களை இங்கிலாந்துக்கு நகர்த்துவது தொடர்பாக இரு நாடுகளும் விவாதித்தன. இரண்டு டிஜிட்டல் தளங்களை உருவாக்கும் பணிகள் நடந்து வருவதை இந்தியா எடுத்துரைத்தது. அதில்ஒரு தளம், மற்ற நாடுகளுக்கான சுகாதாரப் பணியாளர்களின் இயக்கத்திற்கு உதவுகிறது. மற்றொன்று, மருத்துவ மதிப்பு பயணத்தை எளிதாக்குகிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தை உள்ளடக்கிய பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளை எதிர்கொள்வதில் இந்திய மருந்துத் தொழில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க மருந்துத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது. சர்வதேச சுகாதார விதிமுறைகள் மற்றும் அரசுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை அமைப்பு தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்தும் நாடுகள் விவாதித்து தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ஹெகாலி ஜிமோமி மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
************
SRI/BR/RR
(Release ID: 2022015)
(रिलीज़ आईडी: 2022043)
आगंतुक पटल : 107