வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த உத்திகள் தொடர்பான சிந்தனை அரங்கத்தை வர்த்தக அமைச்சகம் நடத்தியது
Posted On:
28 MAY 2024 3:54PM by PIB Chennai
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை, இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம், வர்த்தக மற்றும் முதலீட்டு சட்ட மையம் ஆகியவை இணைந்து 2024 மே 16 முதல் 17 வரை ராஜஸ்தானின் நீம்ரானாவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்த உத்தி மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் குறித்த சிந்தனை அரங்க நிகழ்ச்சியை நடத்தின.
இரண்டு நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சியில், இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் மற்றும் அத்தகைய பேச்சுவார்த்தைகளின்போது பின்பற்றப்பட வேண்டிய செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மத்திய வர்த்தகத் துறைச் செயலாளர் திரு சுனில் பர்த்வால் இந்த சிந்தனை அரங்க நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளிலிருந்து மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
(1) பொருளாதார மதிப்பீடு மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்ளின் அமைப்பு;
(2) தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின்போது தொழிலாளர், சுற்றுச்சூழல் போன்ற அம்சங்ளில் கவனம் செலுத்துதல்;
(3) வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்களில் சேவைகள் மற்றும் டிஜிட்டல் வர்த்தகம்
(4) தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள்;
(5) திறன் மேம்பாடு மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த வள மேலாண்மை;
(6) முக்கிய கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்துதல்.
ஆகிய கருப்பொருள்களில் இந்த சிந்தனை அமர்வுகள் நடைபெற்றன.
வர்த்தகத் துறைச் செயலாளர் திரு சுனில் பர்த்வால், வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் ஆகியோரின் சிறப்புரையுடன் இந்த சிந்தனை அரங்க நிகழ்ச்சி நிறைவடைந்தது.
************
ANU/SMB/PLM/KV/KR/DL
(Release ID: 2021971)
Visitor Counter : 56