மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
எம்ஆர்ஐ மற்றும் தொழில்நுட்பப் பகிர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் முன்னிலையில் தொழில்துறை அமைச்சக செயலாளர் முன்னிலையில் சமீர் அமைப்பு பரிமாறிக் கொண்டது
प्रविष्टि तिथि:
27 MAY 2024 8:13PM by PIB Chennai
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இரண்டு முக்கியமான சுகாதார தொழில்நுட்பங்களான 1.5 டெஸ்லா எம்ஆர்ஐ ஸ்கேனர் மற்றும் 6 எம்இவி லீனியர் ஆக்சிலரேட்டர் ஆகியவற்றை மும்பை சொசைட்டி ஃபார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அண்ட் ரிசர்ச் (சமீர்) அமைப்பு மூலம் செயல்படுத்துகிறது. இது திருவனந்தபுரம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் (C-DAC), பல்கலைக்கழகங்களுக்கிடையேயான செயல்பாட்டு மையம் (IUAC) மற்றும் தயானந்த் சாகர் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இது செயல்படுத்தப்படுகிறது.
எம்ஆர்ஐ ஸ்கேனர் என்பது மென்மையான திசுக்களை காட்சிப்படுத்த பயன்படுத்தப்படும் ஊடுருவல் அல்லாத மருத்துவ இமேஜிங் சோதனை ஆகும். அதே நேரத்தில் லீனியர் முடுக்கி (லினாக்) உயர் ஆற்றல் எக்ஸ்-கதிர்கள் அல்லது எலக்ட்ரான்களைப் பயன்படுத்தி புற்றுநோய் சிகிச்சைக்கு இது பயன்படுத்தப்படுகிறது. இதன் இறக்குமதியைக் குறைக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதி உதவியுடன் இது தொடர்பான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சுகாதாரத் தொழில்நுட்பங்கள் பொதுமக்களுக்கு அணுகக்கூடிய மற்றும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டை விரைவுபடுத்துதல் மிகவும் முக்கியமானதாகும். எனவே, இதில் தொழில்துறையின் ஈடுபாடு மிக முக்கியமானது.
இதன் ஒரு பகுதியாக சமீர் அமைப்பு தொழில்நுட்ப (ToT) பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சில தொழில் நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் திரு எஸ் கிருஷணன் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிகழ்ச்சியில் துறையின் கூடுதல் செயலாளர் திரு புவனேஷ் குமார், சமீர் அமைப்பின் தலைமை இயக்குநர் திரு ஹனுமந்த ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
************
ANU/PLM/KV/KR
(Release ID: 2021884)
(रिलीज़ आईडी: 2021943)
आगंतुक पटल : 126