அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

"இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புச்சூழல் அமைப்பை மாற்றுதல்" என்ற தலைப்பில் தேசிய சிந்தனை அமர்வுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஏற்பாடு செய்திருந்தது

Posted On: 22 MAY 2024 6:18PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள இந்திய தேசிய அறிவியல் அகாடமியில் (ஐஎன்எஸ்ஏ) "இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புச்சூழல் அமைப்பை மாற்றியமைத்தல்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான சிந்தனை அமர்வுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஏற்பாடு செய்திருந்தது.
இந்திய தேசிய அறிவியல் அகாடமி (ஐ.என்.எஸ்.ஏ) நடத்திய விவாதங்கள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு;   சமபங்கு மற்றும் அனைவரையும் உள்ளடக்குதல்; தொழில்நுட்ப வளர்ச்சி, பரிமாற்றம், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு; சர்வதேச ஒத்துழைப்பு;  அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு நிர்வாகம் போன்ற முக்கியமான பகுதிகளில் கவனம் செலுத்தின.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை எளிதாக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைகளை உருவாக்குவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பல ஆண்டுகளாக முன்னோடியாக உள்ளது என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் தனது தொடக்க உரையில் கூறினார். "நாங்கள் கொள்கை ஆராய்ச்சிக்கான பல மையங்களை அமைத்துள்ளோம். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குறிகாட்டிகளை உருவாக்குதல், உலகளாவிய நடைமுறைகளுக்கு ஈடாக  அந்தக் குறிகாட்டிகளை தரப்படுத்துதல் மற்றும் நாட்டின் முழு அறிவியல் மற்றும் தொழில்நுட்பச்சூழல் அமைப்பு பற்றி ஆதார அடிப்படையில் பகுப்பாய்வு செய்தல் போன்ற பகுதிகளில் நாங்கள் முன்னிலை வகித்துள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
ஆராய்ச்சி செய்வதை எளிதாக்குவதற்கும், ஆழமான தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களுக்கு  வசதி செய்வதற்கும் அனைத்து அமைச்சகங்களுடனும் இணக்கமாகப் பல்வேறு துறைகளில் கொள்கை தலையீடுகளை உருவாக்குவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை முன்னிலை வகிக்க முடியும் என்று பேராசிரியர் கரண்டிகர் உறுதிபட தெரிவித்தார் . "தற்போது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பச்சூழல் அமைப்பு வேகமாக மாறுவதால், மாற்றங்களுடன் ஒத்திசையக்கூடிய விரைவான மற்றும் தகவமைப்பு கொள்கைகளை நாம்  வடிவமைக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்திய தேசிய அறிவியல் அகாடமி (ஐ.என்.எஸ்.ஏ) தலைவர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் அகிலேஷ் குப்தா ஆகியோரும் இந்த அமர்வில் பேசினர்.

***********

ANU/AD/SMB/KV



(Release ID: 2021397) Visitor Counter : 40


Read this release in: English , Urdu , Hindi