பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.பகத்  நினைவு உரை நிகழ்ச்சியை ராணுவம் நடத்தியது

प्रविष्टि तिथि: 17 MAY 2024 8:37PM by PIB Chennai

"லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.பகத் நினைவு உரை" நிகழ்ச்சியை இரண்டாவது ஆண்டாக ராணுவம் புதுதில்லி மானெக்ஷா மையத்தில் நடத்தியது. 

"எழுச்சி பெறும் இந்தியாவில் ஆயுதப்படையின் பங்களிப்பு" என்ற கருப்பொருளில் இந்த உரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  அருணாச்சல பிரதேச ஆளுநரும் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரலுமான கே.டி.பர்நாயக், கருப்பொருள் தொடர்பான தலைப்பில் முக்கிய உரையை நிகழ்த்தினார்.  தேசக் கட்டமைப்பில் ஆயுதப் படைகளின் முக்கிய பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார்.  லெப்டினன்ட் ஜெனரல் பகத்தின் ராணுவ வாழ்க்கையையும் அவர் நினைவு கூர்ந்தார்.

ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். இரண்டாம் உலகப் போரின் போது விக்டோரியா கிராஸ் விருது பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் பகத்தின் துணிச்சலை அவர் விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதிகள் ஜெனரல் ஜே.ஜே.சிங், ஜெனரல் தீபக் கபூர், ஜெனரல் எம்.எம்.நரவனே ஆகியோர் கலந்து கொண்டனர். பணியில் உள்ள மூத்த அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

***

ANU/PLM/KV


(रिलीज़ आईडी: 2020992) आगंतुक पटल : 108
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी