எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"எஃகு துறையில் நிலைத்தன்மையை உருவாக்குதல்" குறித்த தேசிய பயிலரங்கை எஃகு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது

प्रविष्टि तिथि: 17 MAY 2024 6:29PM by PIB Chennai

புதுதில்லி விஞ்ஞான் பவனில் "எஃகுத் துறையில் நீடித்த தன்மையை உருவாக்குதல்" என்ற தலைப்பில் தேசிய பயிலரங்கை எஃகு அமைச்சகம் இன்று (17.05.2024) ஏற்பாடு செய்திருந்தது. சவால்களைக் குறைப்பதற்கான நிலையான நடைமுறைகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் எஃகு துறையின் முக்கிய பிரச்சினைகளில் பங்குதாரர்களை ஈடுபடுத்துதல் இதன் மூலம் எஃகு தொழிலில் நிலையான நடைமுறைகளை செயல்படுத்துதல்  ஆகியவை இந்தப் பயிலரங்கின் நோக்கமாகும். தொடக்க அமர்வில் எஃகு அமைச்சகத்தின் செயலாளர் திரு நாகேந்திர நாத் சின்ஹா, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் திருமதி லீனா நந்தன், எஃகு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் எஃகுத் துறையைச் சேர்ந்த பிற பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

தொடக்க அமர்வில் உரையாற்றிய எஃகு அமைச்சகத்தின் செயலாளர் திரு நாகேந்திர நாத் சின்ஹா, எஃகுத் துறையின் நிலைத்தன்மை குறித்து கலந்துரையாட எஃகு அமைச்சகம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உள்ளிட்ட பிற அமைச்சகங்களுடனும் நித்தி ஆயோக் அமைப்புடனும் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சி இது என்று கூறினார்.

அதிகரித்து வரும் தேவைக்கிடையே கார்பன் உமிழ்வும் அதிகரிக்கும் சவாலை சுட்டிக்காட்டிய திரு சின்ஹா, இந்தியாவின் ஒரு டன் கச்சா எஃகு உமிழ்வு உலக சராசரியை விட 25% அதிகமாக உள்ளது என்றார். இயற்கை எரிவாயு பற்றாக்குறை, கிடைக்கும் இரும்புத் தாதுவின் தரம், எஃகுக் கழிவு குறைவாக கிடைப்பது போன்ற காரணிகள் இதற்குக் காரணம் என்பதையும் திரு சின்ஹா சுட்டிக்காட்டினார். உள்நாட்டு எஃகுக் கழிவு உற்பத்தி 20-25 மில்லியன் டன்னாக மட்டுமே உள்ளது.

இந்த சவால்களை எதிர்கொள்ள, சுரங்க அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பணிக்குழுவின் தொடர்ச்சியான முயற்சிகளை திரு சின்ஹா சுட்டிக்காட்டினார். எஃகு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக குறைந்தத் தரத்திலான இரும்புத் தாதுவின் பயன்பாட்டை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

எஃகு தயாரிப்பில் 90% உமிழ்வுகள் தொழிற்சாலை வாயில்களுக்கு உள்ளிருந்து வருகின்றன. மீதமுள்ள உமிழ்வுகள் மின்சார உற்பத்தி மூலமும் எஃகுத் தாதுவின் குழம்பிலிருந்து பட்டை, உருளை போன்ற வடிவங்களுக்கு மாற்றும் செயல்முறைகள் ஆகியவற்றிலிருந்து வருகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார் . எனவே, தொழில்துறை, உமிழ்வுகள் மீது கணிசமான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என்று கூறிய அவர்  நிலைத்தன்மையை நோக்கி செயலூக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2020946

*****

 

ANU/AD/SMB/KPG/DL

 


(रिलीज़ आईडी: 2020965) आगंतुक पटल : 114
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi