புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் காலமுறை கணக்கெடுப்பு - காலாண்டு அறிக்கை (ஜனவரி-மார்ச் 2024)

Posted On: 15 MAY 2024 4:53PM by PIB Chennai

நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின்  வேலையின்மை விகிதம் 2023 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 6.8% ஆக இருந்த நிலையில் அது 2024 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம்  வரை 6.7% ஆக குறைந்துள்ளது.

நகர்ப்புறங்களில் மகளிரின் வேலையின்மை விகிதம் 2023 ஜனவரி மாதம் முதல்  மார்ச் மாதம் வரை 9.2% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அது 8.5% ஆக குறைந்தது.

நகர்ப்புறங்களில் தொழிலாளர் விகிதம் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரைப் பொறுத்த வரை 2023  ஜனவரி முதல்   மார்ச் மாதம் வரை 48.5% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி் முதல் மார்ச் மாதம் வரை அது 50.2%  ஆக அதிகரித்துள்ளது.

நகர்ப்புறங்களில் பெண் பணியாளர் விகிதம் 2023  ஜனவரி முதல்  மார்ச் மாதம் வரை 22.7% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி  மாதம் முதல் மார்ச் மாதம் வரை அது  25.6% ஆக அதிகரித்துள்ளது. இது LFPR இன் ஒட்டுமொத்த அதிகரிப்பு போக்கை பிரதிபலிக்கிறது.

15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தொழிலாளர்கள் விகிதத்தின் படி, 2023  ஜனவரி முதல்  மார்ச் மாதம் வரை 45.2% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 46.9% ஆக அதிகரித்துள்ளது.

நகர்ப்புறங்களில் பெண் தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் 2023 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 20.6% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி முதல் மார்ச் மாதம்  வரை 23.4% ஆக உயர்ந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2020668

-----

ANU/AD/IR/KPG/RR/DL


(Release ID: 2020739) Visitor Counter : 145


Read this release in: English , Urdu , Hindi , Odia