சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை விமான நிலைய சுங்கப் புலனாய்வுப் பிரிவு மூலம் ரூ.1.07 கோடி மதிப்புள்ள 1.69 கிலோ 24 காரட் தூய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
प्रविष्टि तिथि:
03 MAY 2024 1:01PM by PIB Chennai
உளவுத்துறை தகவலின் அடிப்படையில், 01.05.2024 அன்று ஏர் அரேபியா விமானம் மூலம் ஷார்ஜாவிலிருந்து வந்த இந்திய பெண் பயணி ஒருவர் விமான நிலைய சுங்கப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் சோதனையிடப்பட்டார். இந்த சோதனையின் போது ரப்பர் பசை வடிவிலான தங்கம் அவரது உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ரூ.1.07 கோடி மதிப்புள்ள 1.69 கிலோ 24 காரட் தூய தங்கம் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. பயணி கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

***
SRI/SMB/AG/KV
(रिलीज़ आईडी: 2019526)
आगंतुक पटल : 85
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English