பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு செயலாளர், இந்தோனேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் ஆகியோர் புதுதில்லியில் 7-வது கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுக் கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்கவுள்ளனர்
Posted On:
02 MAY 2024 4:06PM by PIB Chennai
இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான ஏழாவது கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம் 2024 மே 03 அன்று புதுதில்லியில் நடைபெறவுள்ளது. பாதுகாப்புத் துறை செயலர் திரு. கிரிதர் அரமானே, இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் ஏர் மார்ஷல் (ஓய்வு) டோனி எர்மவான் டவுஃபாண்டோ ஆகியோர் இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார்கள். பகிர்ந்து கொள்ளப்பட்ட ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.
2018-ம் ஆண்டில் விரிவான உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்ட இந்தியா-இந்தோனேசியா நட்புறவு, பாதுகாப்புத் தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் புதிய ஒத்துழைப்பை அனுமதிக்கும் வகையில் இருதரப்பு உறவுகளின் வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளது. வளர்ந்து வரும் கூட்டாண்மைக்கு இந்தப் பாதுகாப்பு உறவுகள் ஒரு குறிப்பிடத்தக்க தூண்களாக அமைகின்றன.
2024, மே 02 அன்று இந்தியாவுக்கு வருகை தரும் இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர், புதுடெல்லி மற்றும் புனேவில் உள்ள இந்தியப் பாதுகாப்பு தொழில்துறையினருடனும் விவாதங்களை மேற்கொள்வார்.
***
(Release ID: 2019412)
AD/SMB/RS/RR
(Release ID: 2019427)
Visitor Counter : 104