இந்திய போட்டிகள் ஆணையம்
சான்யோ ஸ்பெஷல் ஸ்டீல் மேனுஃபேக்சரிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சான்யோ ஸ்பெஷல் ஸ்டீல் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் 15.43% பங்குகளை மிட்சுய் & கோ லிமிடெட் நிறுவனத்திடமிருந்து வாங்க சி.சி.ஐ ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
30 APR 2024 8:24PM by PIB Chennai
மிட்சுய் & கோ லிமிடெட் நிறுவனத்திடமிருந்து சான்யோ ஸ்பெஷல் ஸ்டீல் மேனுஃபேக்சரிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் (எஸ்.எஸ்.எம்.ஐ) நிறுவனத்தில் சான்யோ ஸ்பெஷல் ஸ்டீல் கம்பெனி லிமிடெட் 15.43% பங்குகளை வாங்க இந்திய போட்டியியல் ஆணையம் (சி.சி.ஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
சான்யோ ஸ்பெஷல் ஸ்டீல் கோ லிமிடெட் என்பது ஜப்பானை தளமாகக் கொண்ட நிறுவனமாகும். இது உலகளவில் எஃகு தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்கிறது. இது ஐரோப்பா மற்றும் இந்தியாவில் உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளது. இது தாங்கி எஃகு, பொறியியல் எஃகு, துருப்பிடிக்காத எஃகு, வெப்ப எதிர்ப்பு எஃகு மற்றும் கருவி எஃகு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு எஃகு தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், சான்யோ நிப்பான் ஸ்டீல் கார்ப்பரேஷன் குழுமத்தின் ஒரு பகுதியாகும்.
எஸ்.எஸ்.எம்.ஐ என்பது ஒரு கூட்டு முயற்சி நிறுவனமாகும், இது செப்டம்பர் 2012 இல் மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் (இந்தியா), சான்யோ ஸ்பெஷல் ஸ்டீல் கோ, லிமிடெட் (ஜப்பான்) மற்றும் மிட்சுய் & கோ, லிமிடெட் (ஜப்பான்) ஆகியவற்றுக்கு இடையில் இணைக்கப்பட்டது.
சி.சி.ஐ.யின் விரிவான ஆணை விரைவில் வெளியிடப்படும்.
***
PKV/RS/RR
(Release ID: 2019229)
(रिलीज़ आईडी: 2019399)
आगंतुक पटल : 107