சுரங்கங்கள் அமைச்சகம்

இந்தியாவின் முக்கியமான கனிம செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான உத்தி சார் ஒத்துழைப்பு மற்றும் கொள்கை நுண்ணறிவுகளின் குறிப்புடன் முக்கிய கனிமங்கள் உச்சி மாநாடு நிறைவடைந்தது

Posted On: 30 APR 2024 5:52PM by PIB Chennai

இந்தியாவின் முக்கியமான கனிம செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான உத்தி சார் ஒத்துழைப்பு மற்றும் கொள்கை நுண்ணறிவுகளின் குறிப்புடன் முக்கிய கனிமங்கள் உச்சி மாநாடு இன்று புதுதில்லியில் நிறைவடைந்தது. நீடித்த எரிசக்தி அறக்கட்டளை (சக்தி), எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (சிஇஇடபிள்யூ), இந்திய நீடித்த மேம்பாட்டு நிறுவனம் (ஐஐஎஸ்டி) ஆகியவற்றுடன் இணைந்து சுரங்க அமைச்சகம் இந்த உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

உச்சிமாநாட்டின் இரண்டாவது மற்றும் இறுதி நாளில், கொள்கை ஊக்குவிப்புகள் மற்றும் இந்தியாவில் முதலீடு செய்வதன் நன்மைகள் குறித்த குழு விவாதம் பங்கேற்றவர்களிடையே ஒரு வலுவான உரையாடலை வெளிப்படுத்தியது.

சுரங்க அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டாக்டர் வீணா குமாரி டெர்மல், உச்சிமாநாட்டின் முக்கிய எடுத்துக்காட்டுகள் மற்றும் எதிர்கால திசைகளை உள்ளடக்கி நிறைவுரையாற்றினார். முக்கியமான கனிம விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதற்கும், இந்தியாவில் திறன் மேம்பாட்டை ஊக்கப்படுத்துவதற்கும், முக்கியமான கனிம மறுசுழற்சியில் கவனம் செலுத்துவதற்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச முயற்சிகளை அவர் வலியுறுத்தினார். இந்தக் கனிமங்களுக்கு இந்தியாவின் பதப்படுத்தும் தொழில்நுட்பங்களை டாக்டர் டெர்மல் எடுத்துரைத்ததோடு, கடலுக்குள் மேற்கொள்ளப்படும் சுரங்க விதிமுறைகளில் உள்ள திருத்தங்களையும் குறிப்பிட்டார்.

***

AD/SMB/RS/DL



(Release ID: 2019226) Visitor Counter : 50


Read this release in: English , Urdu , Hindi , Punjabi