தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஐஎம்டி-க்கு அடையாளம் காணப்பட்டுள்ள '37-37.5 ஜிகாஹெர்ட்ஸ், 37.5-40 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 42.5-43.5 ஜிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை அலைவரிசைகளை ஏலம் விடுவதற்கான ட்ராய் அமைப்பின் ஆலோசனை அறிக்கை மீது கருத்துகள் மற்றும் மாற்று கருத்துகள் தெரிவிக்க கடைசி தேதி நீட்டிப்பு'
Posted On:
30 APR 2024 5:46PM by PIB Chennai
தகவல் நிர்வாக தொழில்நுட்பத்திற்கு (ஐஎம்டி) அடையாளம் காணப்பட்ட 37-37.5 ஜிகாஹெர்ட்ஸ், 37.5-40 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 42.5-43.5 ஜிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை அலைவரிசைகளை ஏலம் விடுவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) குறித்த ஆலோசனை அறிக்கையை 04.04.2024 அன்று வெளியிட்டது.
தொடக்கத்தில், ஆலோசனை அறிக்கையில் பங்குதாரர்களிடமிருந்து எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து எழுத்துப்பூர்வ கருத்துக்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 02.05.2024 ஆகவும், மா்றறு கருத்துகளுக்கு 16.05.2024 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
கருத்துகள் / மாற்று கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற பங்குதாரர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் மாற்று கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை முறையே மே 16, 2024 மற்றும் மே 30, 2024 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட்டிப்புக்கான இனிவரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.
கருத்துகள் / மாற்று கருத்துக்களை மின்னணு வடிவில் advmn@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம்:. ஏதேனும் விளக்கம் / தகவலுக்கு, டிராய் ஆலோசகர் (நெட்வொர்க், அலைக்கற்றை மற்றும் உரிமம்) திரு அகிலேஷ் குமார் திரிவேதியை +91-11-23210481 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
***
AD/SMB/RS/DL
(Release ID: 2019201)
Visitor Counter : 65