மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
டிஜிலாக்கர் ஒருங்கிணைப்பு மூலம் டிஜிட்டல் மாற்றத்தை இந்திய விமானப்படை ஏற்படுத்துகிறது
Posted On:
26 APR 2024 6:49PM by PIB Chennai
இந்திய விமானப்படை இன்று டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஒரு முதன்மை முயற்சியான டிஜிலாக்கர் தளத்துடன் ஒருங்கிணைப்பு டிஜிட்டல் பயணத்தைத் தொடங்கியது. விமானப்படை தலைமையகமான வாயு பவனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், இந்திய விமானப்படை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) டிஜிலாக்கரின் பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய ஆவண களஞ்சிய சேவைகளை மேம்படுத்துவதற்கான முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த முன்னோடி ஒருங்கிணைப்பு, பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை வீரர்களின் முக்கியமான சேவை ஆவணங்கள் வழங்கப்படுவது, அணுகப்படுவது மற்றும் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்படுவதில் புரட்சியை ஏற்படுத்தும். அதிநவீன தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், தரவு பாதுகாப்பு, செயல்பாட்டு செயல்திறன் மற்றும் தகவல்களுக்கான தடையற்ற அணுகல் ஆகியவற்றிற்கான தனது உறுதிப்பாட்டை இந்திய விமானப்படை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
அங்கீகரிக்கப்பட்ட விமானப்படையின் துறைகள் மற்றும் பிரிவுகள் இப்போது டிஜிட்டல் பதிவுகள், சான்றிதழ்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை தேசிய டிஜிலாக்கர் களஞ்சியத்தில் தடையின்றி பதிவேற்ற முடியும், இது பாதுகாப்பான சேமிப்பு மற்றும் எளிதான அணுகலை உறுதி செய்கிறது.
ஐ.ஏ.எஃப் அதிகாரிகள் தங்கள் முக்கியமான ஆவணங்களான சேவை சான்றிதழ் போன்றவற்றை தங்கள் தனிப்பட்ட டிஜிலாக்கர் மூலம் நேரடியாக அணுக முடியும், இது வசதியான மீட்டெடுப்பு மற்றும் சரிபார்ப்பை செயல்படுத்துகிறது.
இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் பிலிப் தாமஸ் மற்றும் மின்னணு இஐடி நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஆகாஷ் திரிபாதி இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ்.கிருஷ்ணன், இந்த முயற்சியை "இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்ற பயணத்தில் ஒரு திருப்புமுனை தருணமாகும்” என்றார்.
269 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்கள் மற்றும் 6.73 பில்லியன் ஆவணங்களுடன், டிஜிலாக்கர் டிஜிட்டல் ஆவண பரிமாற்ற தளத்திற்கான தேசிய தளமாக வேகமாக வளர்ந்து வருகிறது.
டிஜிலாக்கருடனான இந்திய விமானப்படையின் ஒருங்கிணைப்பு, நாட்டின் தொழில்நுட்ப வலிமை மற்றும் ஆயுதப்படைகளின் நவீனமயமாக்கல் முயற்சிகளுடன் இணைந்து, விரிவான டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டுள்ளது.
***
PKV/RS/DL
(Release ID: 2018965)
Visitor Counter : 123