தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

'தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு பகிர்வு, ஸ்பெக்ட்ரம் பகிர்வு மற்றும் ஸ்பெக்ட்ரம் குத்தகை' குறித்த பரிந்துரைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது

Posted On: 24 APR 2024 6:28PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 'தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு பகிர்வு, ஸ்பெக்ட்ரம் பகிர்வு மற்றும் ஸ்பெக்ட்ரம் குத்தகை' குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

நாட்டில் அலைவரிசைகளுக்கு இடையேயான அலைக்கற்றை பகிர்வுக்கும், குத்தகைக்கு விடுவதற்கும் அனுமதிக்க வேண்டும் என்ற பங்குதாரர்களின் கோரிக்கையை பரிசீலித்த ஆணையம், அலைக்கற்றை பகிர்வு மற்றும் அலைக்கற்றை குத்தகை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் உள்கட்டமைப்பு பகிர்வு தொடர்பான பிரச்சனைகளை பங்குதாரர்களின் ஆலோசனையின்படி எடுத்துக் கொள்ள முடிவு செய்தது.

பரிந்துரைக்கும் கட்டணங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையைப் பகிர்வது, வர்த்தகம் செய்வது, குத்தகைக்கு விடுவது மற்றும் ஒப்படைப்பதை மத்திய அரசு அனுமதிக்கலாம் என்று புதிதாக இயற்றப்பட்ட தொலைத்தொடர்புச் சட்டம், 2023 கூறுகிறது.

தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு பகிர்வு குறித்த பரிந்துரைகளை அமல்படுத்துவது தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு அதிக செலவைக் குறைப்பதற்கும், சந்தைக்கான நேரத்தை மேம்படுத்துவதற்கும் உதவும். அரசு நிதியுதவி பெறும் உள்கட்டமைப்பை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு பின்தங்கிய பகுதிகளில் தொலைத்தொடர்பு விரிவுபடுத்தப்படும்.

இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் சிறந்த தரமான சேவையை வழங்கவும், தொலைத்தொடர்பு சேவைகளை அதிகரிக்கவும் முடியும்.

இந்த பரிந்துரைகள் டிராய் அமைப்பின் இணையதளத்தில் www.trai.gov.in வெளியிடப்பட்டுள்ள. ஏதேனும் விளக்கம் / தகவலுக்கு, ஆணைய ஆலோசகர் (நெட்வொர்க் அலைகற்றை மற்றும் உரிமம்), ஸ்ரீ அகிலேஷ் குமார் திரிவேதியை + 91-11-23210481 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது advmn@trai.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

***

(Release ID: 2018756)

SMB/AG/RR



(Release ID: 2018813) Visitor Counter : 22


Read this release in: Marathi , English , Urdu , Hindi