பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பி.ஐ.எஸ் 6 நிலையின் அதிகபட்ச அச்சுறுத்தலுக்கு எதிரான பாதுகாப்புக்காக இலகுரக குண்டு துளைக்காத ஜாக்கெட்டை டி.ஆர்.டி.ஓ உருவாக்கியுள்ளது

Posted On: 23 APR 2024 9:20PM by PIB Chennai

கான்பூரில் உள்ள டிஆர்டிஓவின் பாதுகாப்புப் பொருட்கள் மற்றும் கிடங்குகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.எம்.எஸ்.ஆர்.டி.இ) 7.62 x 54 ஆர் ஏபிஐ (பிஐஎஸ் 17051-ன் நிலை 6) வெடிபொருட்களிலிருந்து பாதுகாப்பதற்காக நாட்டிலேயே மிகவும் இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட்டை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. சமீபத்தில், இந்த குண்டு துளைக்காத ஜாக்கெட் பிஐஎஸ் 17051-2018-ன் படி சண்டிகரில் உள்ள அணு ஆயுத ஆராய்ச்சி பரிசோதனை முனையத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஜாக்கெட் புதிய வடிவமைப்பு அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது.

அதிக அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட்டை வெற்றிகரமாக உருவாக்கியதற்காக டி.எம்.எஸ்.ஆர்.டி.இ.-க்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

************


(Release ID: 2018661)

SRI/SMB/RS/RR


(Release ID: 2018726) Visitor Counter : 78


Read this release in: English , Urdu , Hindi , Bengali