இந்திய போட்டிகள் ஆணையம்
சர்வதேச நிதிக் கழகத்தின் மூலம் நேபினோ ஆட்டோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கட்டாய மாற்றத்தக்க கடன் பத்திரங்களுக்கு சந்தா செலுத்த இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
23 APR 2024 7:20PM by PIB Chennai
சர்வதேச நிதிக் கழகத்தின் மூலம் நேபினோ ஆட்டோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கட்டாய மாற்றத்தக்க கடன் பத்திரங்களுக்கு சந்தா செலுத்த இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச நிதிக் கழகம் என்பது 1956-ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு சர்வதேச நிறுவனமாகும், இது தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் அதன் வளரும் உறுப்பு நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இது உலக வங்கி குழுமத்தின் உறுப்பினராக உள்ளது. தனியார் துறை முதலீட்டிற்கு நிதியளிப்பதன் மூலமும், சர்வதேச நிதிச் சந்தைகளில் மூலதனத்தைத் திரட்டுவதன் மூலமும், வணிகங்கள் மற்றும் அரசுகளுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதன் மூலமும் வளரும் நாடுகளுக்கு நிலையான வளர்ச்சியை அடைய சர்வதேச நிதிக்கழகம் உதவுகிறது.
நேபினோ நிறுவனம் இந்தியாவில் ஆட்டோமோட்டிவ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உதிரிபாகங்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. இது முதன்மையாக 2-சக்கர, 3-சக்கர, 4-சக்கர வாகனங்களின் ஒரு சிறிய பிரிவுக்கான மின் மற்றும் மின்னணு தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2018635
***
SRI/IR/AG/RR
(Release ID: 2018714)
Visitor Counter : 73