அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) நிதி நிர்வாகத்திற்கான புதிய 'கணக்கு மேலாளர் மென்பொருளை' செயல்படுத்துகிறது
Posted On:
22 APR 2024 3:27PM by PIB Chennai
நிதி நிர்வாகத்திற்காக சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தாலேயே உருவாக்கப்பட்ட 'கணக்கு மேலாளர் மென்பொருளை' (ஏஎம்எஸ்) வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம் இந்நிறுவனம் நாட்டில் உள்ள மற்ற அனைத்து மத்திய தன்னாட்சி நிறுவனங்களுக்கும் ஒரு முன்மாதிரியை உருவாக்கி உள்ளது.
பொது நிதி விதிகள் உருவாக்குவதற்கு காலக்கெடுவான ஜூன் 30-க்கு முன்னதாகவே 2023-24-ம் நிதியாண்டிற்கான தனது வருடாந்தர கணக்குகளை 2024 ஏப்ரல் 01 அன்று சிஎஸ்ஐஆர் உருவாக்கியது. 2023-24 நிதியாண்டுக்கான வருடாந்தர கணக்குகள் ஏற்கனவே தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சிஎஸ்ஐஆர் மென்பொருளின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று அதன் நிகழ்நேர கண்காணிப்புத் திறன் ஆகும். நிதி நடவடிக்கைகளைப் பயனர்கள் நிகழ்நேரத்தில் கண்காணித்தல், சரியான நேரத்தில் தலையீடு, சிறந்த முடிவெடுத்தல் ஆகியவற்றை இது உறுதிசெய்கிறது.
ஏ.எம்.எஸ் மென்பொருளை மூத்த துணை நிதி ஆலோசகர் திரு எஸ்.பி.சிங், நிதி மற்றும் கணக்குத்துறை அதிகாரி திரு அரவிந்த் கன்னா, தொழில்நுட்ப அதிகாரி திருமதி அகன்ஷா ட்ரெஹான் ஆகியோரைக் கொண்ட உட்குழு உருவாக்கியது. இது சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர்/ அறிவியல், தொழில் ஆராய்ச்சித்துறை (டிஎஸ்ஐஆர்) செயலாளர், டாக்டர் என்.கலைச்செல்வி மற்றும் சிஎஸ்ஐஆர் / டிஎஸ்ஐஆர் இணைச் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர் திரு சேத்தன் பிரகாஷ் ஜெயின் தலைமையின் கீழ் சிஎஸ்ஐஆர் தலைமையகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள அதன் 37 தேசிய ஆய்வகங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
***
SRI/SMB/AG/KPG
(Release ID: 2018464)
Visitor Counter : 93