இந்திய போட்டிகள் ஆணையம்
                
                
                
                
                
                    
                    
                        புரோட்டோஸ் இன்ஜினியரிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட், பஹர்பூர் கூலிங் டவர்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் கூடுதல் பங்குகளைக் கையகப்படுத்த சி.சி.ஐ ஒப்புதல் அளித்துள்ளது
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                16 APR 2024 7:19PM by PIB Chennai
                
                
                
                
                
                
                புரோட்டோஸ் இன்ஜினியரிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் பஹர்பூர், கூலிங் டவர்ஸ் லிமிடெட் ஆகியவை, தைசென்க்ரூப் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை வாங்குவதற்கு இந்தியப் போட்டியியல்  ஆணையம் (சி.சி.ஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
புரோட்டோஸ், உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கான முகவராக செயல்பட்டு வருகிறது. இது  இலக்கு நிறுவனமான  தைசென்க்ரூப் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரே விற்பனை முகவராகவும் உள்ளது.  இலக்கு நிறுவனத்தில் இருந்து சர்க்கரை உபகரணங்கள்/ தொழிற்சாலைகளை வாங்க விரும்பும் சர்க்கரைத் தொழிலைச் சேர்ந்த வாடிக்கையாளர்களை இது அடையாளம் காண்கிறது மற்றும் அத்தகைய ஏற்பாட்டிற்காக  அந்த நிறுவனத்திடம் இருந்து விற்பனைப் பங்கைப் பெறுகிறது.
பஹர்பூர் நிறுவனம்,  தொழில்துறைக்கான குளிரூட்டும் அமைப்புகளின் உற்பத்தி மற்றும் விற்பனை, மின் உற்பத்தி (காற்று மூலம்) மற்றும் வங்கி சாரா நிதி சேவைகளில் ஈடுபட்டுள்ளது.
சி.சி.ஐ.யின் விரிவான உத்தரவு விரைவில் வெளியிடப்படும். 
***
(Release ID: 2018075)
SMB/BR/RR
                
                
                
                
                
                (Release ID: 2018120)
                Visitor Counter : 86