குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
புத்த கயா இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐஐஎம்) 6-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஆற்றிய உரையின் சில முக்கிய பகுதிகள்
Posted On:
07 APR 2024 6:14PM by PIB Chennai
அனைவருக்கும் மதிய வணக்கம்!
இந்த நிகழ்வு புத்த கயாவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்துக்கு (ஐஐஎம்) ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் உதய் கோட்டக், இந்திய வங்கித் துறையில் பிரபலமானவர். இந்த பதவியில் இருப்பதற்கான சிறந்த தகுதிகளைக் கொண்டுள்ளார். ஆழமான அறிவு, அறிவார்ந்த நேர்மை மற்றும் தேசத்திற்காக எப்போதும் துணை நிற்க தயாராக இருப்பது ஆகிய தன்மைகளைக் கொண்டவர்.
ஏற்றத்தாழ்வுகளை அகற்ற கல்வி துணைபுரியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் அனைவரும் தரமான கல்வி கிடைத்த அதிர்ஷ்டசாலிகளாக உள்ளீர்கள்.
நண்பர்களே! புத்த கயா, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடம். இது மாபெரும் பகவான் புத்தர் ஞானம் பெற்ற பூமி. மனிதகுலத்தின் கூட்டு உணர்வில் புத்த கயா ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.
இன்று நாம் இங்கு கூடியிருக்கும் வேளையில், புத்தரின் போதனைகளிலிருந்து உத்வேகம் பெற்று, அன்பு மற்றும் இரக்கம் குறித்த அவரது போதனைகளை நமது வாழ்வில் பின்பற்ற பாடுபடுவோம்.
இந்த ஆறாவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள். இந்த நாள் உங்கள் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை இந்த நிறுவனத்தின் சாதனை சிறப்பாக உள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர்களே,
பட்டமளிப்பு விழா ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது. இது பட்டதாரிகளுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பங்கள், ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கும் பெருமை மற்றும் சாதனையின் தருணமாகும்.
இந்த தருணம் பரந்த உலகில் நீங்கள் நுழைவதற்கான ஒரு படிக்கல்லாக அமைகிறது.
நண்பர்களே,
பாரதம் இன்று சாதாரண தேசமாக இல்லை. இதன் சக்தி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. பாரதத்தின் எழுச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இவை அனைத்தும் உங்களுக்கு மிகவும் சாதகமானவை.
நண்பர்களே,
2047ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய மாரத்தான் பயணத்தின் ஒரு பகுதியாக நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்!
பத்தாண்டுகளுக்கு முன்பு, நமது பொருளாதாரம் பலவீனமாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி உலகப் பொருளாதாரத்தின் 5-வது பெரிய நாடாக நாம் முன்னேறி இருக்கிறோம். 2047-ம் ஆண்டில், நாம் உச்சத்தில் இருப்போம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
நீங்கள் ஜனநாயகத்தின் மிகப்பெரிய பங்குதாரர்கள். நீங்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம். நீங்கள் மிகவும் உற்சாகமான வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறீர்கள். மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கு மக்கள் வசிக்கும் இந்த நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதில் இப்போது உங்கள் திறமையைக் காட்ட நீங்கள் தயாராக உள்ளீர்கள்.
நண்பர்களே, புத்த கயா ஐஐஎம் மாணவர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
வளர்ச்சியோடு மட்டுமின்றி, நமது நாகரிக நெறிமுறைகளை பிரதிபலிக்கும் சிறந்த பாரதத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.
நன்றி. ஜெய் ஹிந்த்!
***
SM/PLM/DL
(Release ID: 2017439)
Visitor Counter : 56