பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவத் தளபதிகள் மாநாட்டில் இந்திய ராணுவத்தின் மூத்தத் தலைவர்களிடையே பாதுகாப்பு அமைச்சர் உரையாற்றினார்
Posted On:
02 APR 2024 3:07PM by PIB Chennai
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ராணுவத் தளபதிகள் மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது. இது மார்ச் 28 அன்று மெய்நிகர் முறையிலும், அதன் பின்னர் 2024 ஏப்ரல் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் நேரடியாகவும் நடத்தப்பட்டது. மாநாட்டின் மூன்றாவது நாளின் சிறப்பம்சமாக பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ராணுவத்தின் மூத்தத் தலைவர்களிடையே உரையாற்றினார்.
நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் எழுச்சியூட்டும் அமைப்புகளில் ஒன்றாக விளங்கும் இந்திய ராணுவத்தின் மீது நூறு கோடிக்கும் அதிகமான குடிமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தினார். நமது எல்லைகளைப் பாதுகாப்பதிலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், ஒவ்வொரு தேவையின் போதும் சிவில் நிர்வாகத்திற்கு உதவுவதிலும் ராணுவத்தின் சிறப்பான பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார்.
தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக தியாகம் செய்த அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார். வெளிநாட்டு ராணுவங்களுடன் நீடித்த ஒத்துழைப்பையும் உறவுகளையும் உருவாக்குவதன் மூலம் நமது தேசிய பாதுகாப்பு நலன்களை மேம்படுத்த ராணுவத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.
***
SMB/RS/KV
(Release ID: 2016925)
Visitor Counter : 82