குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து
Posted On:
24 MAR 2024 6:28PM by PIB Chennai
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவருக்கும் குடியரசு துணைத்தலைவர் திரு ஜெகதீப் தன்கர் தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு;
‘’ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வண்ணங்களின் பண்டிகை, ஹோலி நமது பிணைப்புகளைப் புதுப்பிக்கவும், வசந்தத்தின் வருகையை வரவேற்கவும் ஒரு முக்கியமான தருணமாக உள்ளது. இது வாழ்க்கையின் கொண்டாட்டத்தையும் இயற்கையின் தனித்துவமான அழகையும் உள்ளடக்கியதாகும். ஹோலி நமது இணைப்புகளை வலுப்படுத்தவும், கடந்த காலக் குறைகளை அகற்றவும், புதிய, துடிப்பான வாய்ப்புகளைத் தழுவவும் ஒரு தனித்துவமான வாய்ப்பாகும்.
ஹோலியின் வண்ணங்கள் நம் வாழ்க்கையை மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்துடன் நிரப்பட்டும்’’.
PKV/KRS
(Release ID: 2016282)
Visitor Counter : 96