விவசாயத்துறை அமைச்சகம்
புதுச்சேரியில் வேளாண் அறிவியல் மையங்களின் பொன்விழா கொண்டாட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
Posted On:
21 MAR 2024 7:03PM by PIB Chennai
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் - வேளாண் அறிவியல் மையங்கள் 2024-ம் ஆண்டில் தங்களுடைய பொன்விழாவைக் கொண்டாடுகின்றன. இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சி புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. 1974-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி புதுச்சேரியில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் மூலம் முதலாவது வேளாண் அறிவியல் மையம் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் ஹிமான்ஷு பதக், வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் நாட்டில் உணவு தானியங்கள் உற்பத்தி மற்றும் தோட்டக்கலை உற்பத்தியை அதிகரிக்க உதவியதாக கூறினார். வேளாண் அறிவியல் மையங்கள் தொழில்நுட்ப மாற்றம், திறன் மேம்பாடு, சந்தைப்படுத்துதலுக்கான தகவல் ஆகியவற்றுக்கான விரிவான கேந்திரமாக சாதாரண விவசாயிகளுக்கு சேவை புரிய வேண்டும் என்று தெரிவித்தார்.
ANU/SM/IR/KPG/KRS
(Release ID: 2015991)
Visitor Counter : 100