இந்திய போட்டிகள் ஆணையம்
கேசோராம் தொழில் நிறுவனத்திடமிருந்து கேசோராம் சிமெண்ட் வர்த்தகத்தை அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் கையகப்படுத்த இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல்
प्रविष्टि तिथि:
19 MAR 2024 7:00PM by PIB Chennai
கேசோராம் தொழில் நிறுவனத்திடமிருந்து கேசோராம் சிமெண்ட் வர்த்தகத்தை அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் கையகப்படுத்த இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
அல்ட்ராடெக் என்பது இந்தியாவில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது நிறுவனமாகும், மேலும் இது இந்தியாவில் சாம்பல் சிமெண்ட், வெள்ளை சிமெண்ட், ரெடி-மிக்ஸ் கான்கிரீட், கிளிங்கர் மற்றும் கட்டிட தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. அல்ட்ராடெக் என்பது கிராசிம் தொழில் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
கேசோரம் சிமெண்ட் வர்த்தகம் மூலம் கிரே சிமெண்ட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. கேசோரம் இந்தியாவில் ரேயான், ரசாயன வணிகங்களிலும் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து இந்தியப் போட்டி ஆணையத்தின் விரிவான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்.
-----------
SM/IR/RS/KRS
(रिलीज़ आईडी: 2015599)
आगंतुक पटल : 110