சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

உத்தராகண்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஒப்புதல்

Posted On: 16 MAR 2024 2:58PM by PIB Chennai

பிரதமரின் 'வளர்ச்சியடைந்த இந்தியா வளமான இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் உத்தராகண்டில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் கல்வி உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.101.27 கோடியை ஒதுக்கீடு செய்ததன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் சுமார் 1,05,818 லட்சம் மக்கள் தொகைக்கு சேவை செய்யும், இதில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

உத்தராகண்ட் மாநிலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த வசதிகள் உயர்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன, இதன் மூலம் பகுப்பாய்வு மனநிலையை மேம்படுத்துதல், திறன் மேம்பாடு, தொழில் மேம்பாடு போன்றவற்றில் உயர்கல்வியின் பங்களிப்பை எதிரொலிக்கிறது, இது மாநிலத்தின் இளைஞர்களின் கல்வி மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

மாணவர்களின் முழுமையான கல்விப் பயணத்தில் உள்ளடக்கிய மற்றும் முழுமையான உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்ட சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம், கல்லூரிகளில் கல்வி உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இவை சமுதாய உடைமைகளாகவும் செயல்பட்டு கல்வி மற்றும் சமூகப் பணிகளை மேற்கொள்வதற்கான தளமாக அமைகின்றன. வளர்ச்சியடைந்த பாரதம் தொலைநோக்குத் திட்டம் 2047-ஐ நோக்கிய அமைச்சகத்தின் உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில் தேசிய வளர்ச்சிக்கு உதவுவதற்கான இணைப்புப் படியாக இது அமைந்துள்ளது. 

***

ANU/AD/BS/DL



(Release ID: 2015228) Visitor Counter : 49


Read this release in: English , Urdu , Hindi