சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜலந்தர் என்.ஐ.டி.யில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஒப்புதல்

प्रविष्टि तिथि: 16 MAR 2024 2:58PM by PIB Chennai

பிரதமரின் 'வளர்ச்சியடைந்த இந்தியா, வளமான இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் ஜலந்தர் என்.ஐ.டி.யில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

ஜலந்தர் என்.ஐ.டி.க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்த வசதிகள், டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய ஒரு முன்னெடுப்பாகும். உலகப் பொருளாதாரத்துடன் இணைய வேகத்தில் செல்ல மேம்பட்ட தொழில்நுட்பத்தின் அவசியத்தை வலியுறுத்தும் அதே வேளையில், இணைய மோசடி நடவடிக்கைகளில் இருந்தும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

இரண்டு சிறப்பு மையங்களும் சுமார் 4,000 மாணவர்களுக்கு பயிற்சி வழங்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளன, சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த தலா 1,750 முதல் 2,000 மாணவர்களை உள்ளடக்கியது, இணைய பாதுகாப்பு கல்வியில் பன்முகத்தன்மை மற்றும் சம வாய்ப்புக்கான உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

உள்ளடக்கிய மற்றும் முழுமையான டிஜிட்டல் உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்ட அமைச்சகம், டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் இந்த வகையான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா திட்டத்திற்கான தொலைநோக்குத் திட்டம் 2047-ஐ நோக்கிய எம்ஓஎம்ஏ-வின் உறுதிப்பாட்டை இந்த நிகழ்ச்சி எதிரொலிக்கிறது.

***

ANU/AD/BS/DL


(रिलीज़ आईडी: 2015226) आगंतुक पटल : 101
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी