குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
உதயம் மற்றும் யுஏபி ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியது, இது அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட முறைப்படுத்தல் முயற்சியின் முக்கியமான மைல்கல் ஆகும்
Posted On:
15 MAR 2024 2:40PM by PIB Chennai
2024 மார்ச் 15 அன்று, உதயம் மற்றும் யுஏபி ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியது, இது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட முறைப்படுத்தல் முன்முயற்சியின் முக்கிய மைல்கல்லாகும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு வசதி செய்து கொடுப்பதற்கு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வகைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஆலை மற்றும் இயந்திரங்கள் மற்றும் விற்றுமுதல் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கான கூட்டு வரையறையை அமைச்சகம் 2020 ஜூன் 26 தேதியிட்ட அறிவிக்கையின் மூலம் ஏற்றுக்கொண்டது. 2020 ஜூலை 1 , தேதியிட்ட அறிவிப்பின் மூலம், பான் அட்டை வைத்திருக்கும் நிறுவனங்களை முறைப்படுத்துவதற்காக எளிய, ஆன்லைன் மற்றும் இலவச உத்யம் பதிவு இணையதளம் அதாவது உதயம் தொடங்கப்பட்டது. உதயம் பதிவு ஆலை மற்றும் இயந்திரங்களில் முதலீடு மற்றும் விற்றுமுதல் இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. ஆலை, இயந்திரங்கள் மீதான முதலீடு மற்றும் விற்றுமுதல் விவரங்கள் மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இணையதளத்தின் தரவுகளிலிருந்து பதிவு செய்யப்படுகின்றன.
அதைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி பதிவு இல்லாத நிறுவனங்களுக்காக அமைச்சகம் 2023 ஜனவரி 11, அன்று உதயம் உதவித் தளத்தை அறிமுகப்படுத்தியது. மத்திய அரசின் 2023, மார்ச் 20, தேதியிட்ட அறிவிப்பின்படி உதயம் தளத்தில் முறைசாரா குறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ், முன்னுரிமைத் துறை கடன் (PSL) பலன்களைப் பெறும் நோக்கத்திற்காக உதயம் பதிவுச் சான்றிதழுக்கு இணையாகக் கருதப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கி தனது 2023 மே 9, தேதியிட்ட சுற்றறிக்கையில், உதயம் உதவிச் சான்றிதழுடன் கூடிய குறு நிறுவனங்கள் முன்னுரிமைத் துறை கடன் வகைப்பாட்டின் நோக்கங்களுக்காக சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் கீழ் மைக்ரோ நிறுவனங்களாகக் கருதப்படும் என்றும் வகைப்படுத்தியுள்ளது.
***
SM/BS/AG/KV
(Release ID: 2014926)
Visitor Counter : 114