சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ், பிராந்திய மொழிகளில் அறிவியலை பிரபலப்படுத்தும் திட்டத்தின் மூலம் 2026-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் 50,000 அரசுப் பள்ளிகளைச் சென்றடைய இலக்கு நிர்ணயித்துள்ளது.
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAR 2024 3:05PM by PIB Chennai
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) அறிவியலைப் பிரபலப்படுத்தும் முன்முயற்சியின் வாயிலாக 2026-ம் ஆண்டுக்குள் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த மேலும் 50,000 அரசுப் பள்ளி மாணவர்களைச் சென்றடையவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிராந்திய மொழிகளில் தொழில் வழிகாட்டுதலை வழங்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மாணவர்களை ‘ஸ்டெம்’ (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகள் தொடர்பான தொழில்களில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா தெலங்கானா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 9,193 கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு 3,20,702 புத்தகங்களை இக்கல்வி நிறுவனம் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள பள்ளிகள் மற்றும் மாணவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் - https://biotech.iitm.ac.in/Faculty/CNS_LAB/outreach.html
ஐஐடி மெட்ராஸ் பூபத் மற்றும் ஜோதி மேத்தா உயிரி அறிவியல் பள்ளியின் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் வி.ஸ்ரீனிவாஸ் சக்ரவர்த்தி இந்த முன்முயற்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
இதுபோன்ற முன்முயற்சிகளின் அவசியம் குறித்து விளக்கிய ஐஐடி மெட்ராஸ் பூபத் மற்றும் ஜோதி மேத்தா உயிரி அறிவியல் பள்ளியின் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் வி.ஸ்ரீனிவாஸ் சக்ரவர்த்தி கூறும்போது, “சிக்கலான அறிவியல் கருத்துகள் அனைவரையும் சென்றடைய அனைத்துத் தரப்பினரும் அணுகக் கூடிய ஒரு பாலமாக ‘பாப்புலர் சயின்ஸ்’ அமைந்துள்ளது. அறிவியல் பின்னணி அற்ற தனிநபர்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்டு அவற்றின் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் பாராட்ட வழிவகுக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
“9,193 கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளைச் சென்றடைந்து 3,20,702 புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறோம் எனக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது வரை வழங்கியிருக்கிறோம். ஐஐடி மெட்ராஸ்-க்கும் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களுக்கும், இதற்காக ஆதரவை வழங்கி உறுதுணையாக இருந்துவரும் நன்கொடையாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய புத்தகங்களை ஆர்வத்துடன் படித்து, எங்கள் முயற்சியில் பங்கேற்கும் மாணவர்கள்- ஆசிரியர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான கடிதங்கள், மின்னஞ்சல்களைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்வது அவசியமாகிறது. எங்களின் தற்போதைய செயல்பாடுகள் ஒரு தொடக்கம்தான்” என அவர் தெரிவித்தார்.
ஐஐடி மெட்ராஸ் மற்றும் அதன் சிஎஸ்ஆர் பங்களிப்பாளர்களின் நிதியுதவியுடன், இந்தக் குழுவினர் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு பிரபல அறிவியல் புத்தகங்களை இலவசமாக வெளியிட்டு வழங்கியுள்ளனர். கடந்த மூன்றாண்டுகளாக இந்தி பேசும் மாநிலங்களுக்கும் இந்த முயற்சி விரிவுபடுத்தப்பட்டது.

இக்கருவி ஆங்கிலத்துடன் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், மராத்தி ஆகிய ஏழு இந்திய மொழிகளிலும் தற்போது கிடைக்கிறது. மாணவர்கள் விரும்பும் துறைகளைப் பற்றியும், அதில் ஸ்டெம் துறைகளை குறிப்பாக வலியுறுத்தும் விதமாகவும் தொழில் வழிகாட்டுதல் அமர்வுகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 10,931 மாணவர்களுக்கு இக்கல்வி நிறுவனம் வழிகாட்டுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
###
PKV/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2014902)
வருகையாளர் எண்ணிக்கை : 98