மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
நிதி தொழில் நுட்பம், வங்கி சேவைகளில் புத்தொழில்களை உருவாக்குவதற்காக காந்தி நகரில் 24-வது ஃபின்குளோப் தொழில்முனைவோர் மையத்தை இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா தொடங்கியது
प्रविष्टि तिथि:
11 MAR 2024 6:58PM by PIB Chennai
நிதி தொழில் நுட்பம், வங்கி சேவைகளில் புத்தொழில்களை உருவாக்குவதற்காக காந்திநகரில் 24வது ஃபின்குளோப் தொழில்முனைவோர் மையத்தை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா தொடங்கியது. இது நிதித் தொழில்நுட்பத் துறையில் புதுமை மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
காந்தி நகரில் உள்ள குஜராத் சர்வதேச தொழில்நுட்ப நகரத்தில் தொழில் முனைவோர் மையத்தை சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையத்தின் தலைவர் திரு ராஜாராமன் தொடங்கி வைத்தார்.
குஜராத் அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள ஃபின்குளோப் தொழில் முனைவோர் மையம், நிதிச் சேவைத் துறைக்குள் அதிநவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான காரணியாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
AD/IR/RS/KRS
(रिलीज़ आईडी: 2013563)
आगंतुक पटल : 136