சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஆராய்ச்சி, கல்வி, பயிற்சித் துறையில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்காக இந்திய மருத்துவ முறைக்கான தேசியக் குழுமம், சித்தா ஆராய்ச்சிக்கான மத்தியக் குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
Posted On:
07 MAR 2024 6:20PM by PIB Chennai
ஆராய்ச்சி, கல்வி, பயிற்சித் துறையில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்காக இந்திய மருத்துவ முறைக்கான தேசியக் குழுமம், சித்தா ஆராய்ச்சிக்கான மத்தியக் குழுமம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கு பஞ்சாபி பாக்கில் இன்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் படி, இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் மற்றும் சித்தா ஆராய்ச்சிக்கான மத்தியக் குழுமம் மேற்கொள்ளும் பாடத்திட்டத்தில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க இந்திய மருத்துவ முறைக்கான தேசியக் குழுமம் ஒப்புக்கொண்டது.
இதன் மூலம் சித்தா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் அனுபவம் அடிப்படையிலான மருந்துகளில் இருந்து ஆதாரம் அடிப்படையிலான மருந்துகள் முறைக்கு மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


***
AD/IR/RS/KRS
(Release ID: 2012335)