சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு கருத்தரங்கம்
Posted On:
07 MAR 2024 11:34AM by PIB Chennai
காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியில் கட்டிட பொறியியல் துறை சார்பாக “பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சிக்மா கலந்தாய்வு அரங்கத்தில் இன்று தொடங்கியது.
இத்தொடக்க விழாவில் ஜப்பான் நாட்டின் சுகுபா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர். தோஷியுகி கனகுபோ, பிலானி பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூத்தப் பேராசிரியர் முனைவர் ஷம்ஷேர் பகதூர் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த விழாவில் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் (பொறுப்பு) முனைவர். உஷா நடேசன், பதிவாளர் முனைவர் சீ. சுந்தரவரதன், டீன் (ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை) முனைவர். ஜி எஸ் மஹாபத்ரா, உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் முனைவர். சிவக்குமார் ராமலிங்கம், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இக்கருத்தரங்கிற்கு பல்வேறு முக்கிய நிறுவனங்கள் நிதியுதவி அளித்துள்ளது. இக்கருத்தரங்கிற்காக வாரங்கல், திருச்சி, அகர்தலா, துர்காபூர், ஜாம்ஷெட்பூர் ஆகிய இடங்களில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து 110 கட்டுரைகள் பெறப்பட்டன. இதில் 30 கட்டுரைகள் விரிவுரைக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

***
PKV/AG/KV
(Release ID: 2012120)