விண்வெளித்துறை

உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை ஐந்து மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்

Posted On: 05 MAR 2024 6:41PM by PIB Chennai

உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை ஐந்து மடங்கு அதிகரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார்.

அகமதாபாத்தில் ஐஎன்-ஸ்பேஸ் தொழில்நுட்ப மையத்தை தொடங்கி வைத்துப் பேசிய அவர், இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் தற்போது 8 பில்லியன் டாலராக உள்ளது என்றும், ஆனால் 2040-ம் ஆண்டில் இது பல மடங்கு அதிகரிக்கும் என்பது எங்களுடையக் கணிப்பு என்றும் கூறினார். ஆனால் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சில சர்வதேச பார்வையாளர்களின் கூற்றுப்படி, உதாரணமாக, அண்மையில் வெளியிடப்பட்ட ஏடிஎல் (ஆர்தர் டி லிட்டில்) அறிக்கையின் படி, 2040-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் திறனைக் கொண்டிருக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக  அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி விண்வெளித் துறையை பொது-தனியார் பங்கேற்புக்கு அனுமதித்ததன் மூலம் கடந்த காலத்தின் தடைகளை உடைத்துள்ளார் என்று அவர் கூறினார்.

---------------

PKV/IR/RS/KRS



(Release ID: 2011705) Visitor Counter : 76


Read this release in: English , Urdu , Hindi , Gujarati