பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

பங்களாதேஷின் குடிமைப் பணியாளர்களுக்கான இரண்டு வார 71-வது திறன் மேம்பாட்டுத் திட்டம் முசோரியில் உள்ள சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தில் இன்று தொடங்கியது

Posted On: 04 MAR 2024 5:42PM by PIB Chennai

பங்களாதேஷின் குடிமைப் பணியாளர்களுக்கான 71-வது இரண்டு வார கால திறன் மேம்பாட்டுத் திட்டம் முசோரியில் உள்ள சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தில் இன்று தொடங்கியது.

இப்பயிற்சியை 2024 மார்ச் 4 முதல்  மார்ச் 15 வரை  நடத்துவதற்கு வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முசோரி, புதுதில்லியில் நடைபெறும் இப்பயிற்சித் திட்டத்தில் கூடுதல் துணை ஆணையர்,  உயர்  உதவி ஆணையர், உதவி ஆணையர் ஆகிய 43 அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

 

69வது, 70வது திறன் மேம்பாட்டு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் மூலம், பங்களாதேஷின் 2500 அரசு ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையம் அளித்துள்ளது.

இது பங்களாதேஷ் அரசுடன் சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 1,500 அரசு ஊழியர்களுக்கான திறன்  மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டுக்குள் மேலும் 1,800 அரசு ஊழியர்களின் திறனை அதிகரிக்க பங்களாதேஷ் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

-------------------

AD/IR/RS/KRS



(Release ID: 2011360) Visitor Counter : 47


Read this release in: English , Urdu , Hindi